எங்கும் புகழும் வேதப்பரா பரை
திங்கட் சடையன் ஓர் பாகத்தமர்ந்தவள்
ஆயி சமயபுர மாரியை துதித்தால்
தாய்போல் வந்துநம் தீவினைகள் தீர்ப்பாள்
சந்தன காப்பிட்ட உன் திருமுகத்தை பார்த்த உடன்
ஏந்த அழகும் பார்ப்பதற்கு எந்தன் மனம் நாடவில்லை
சிந்தனையில் உனை நினைந்தே
ஜெபம் செய்தேன் ஒருமையுடன் வந்து என்னை காத்தருள்வாய்
சமயபுர மாரியம்மா
இது வேண்டும் அது வேண்டும் என உள்ளம் அலைகிறதே
எது சரியோ அதை தருவாய் கண்ணனூர் அமர்ந்தவனே
வித வித ரூபிணியே
வித்தைக்கோர் நாயகியே
பத மருள்வாய் சமயபுர
பார்புகழும் மாரியம்மா
நொந்து நொந்து என் மனது நோய்க்கிட மானதுவே
பந்தமற வழி சொல்வாய்ச் சமயபுர மாரியம்மா
கந்தமலர் ஓடை திகழ் கண்ணனூர் பதிவாழும்
சுந்தரி நான் உன்னைத்
தியானிக்க வர மருள்வாய்.
எங்கும்…..
பல்லவி
எங்கும் புகழ் விளங்கும் சமயபுரத்தளே
திங்கள் பிறையணிந்தோன் பங்கிலுறைபவளே
அனுபல்லவி
பொங்கரவணிந்தவளே தாயேயெனத்துதித்தால்
சங்கடங்கள் போக்கி மங்களம் தருபவளே
சரணங்கள்
சந்தனக் காப்பணிந்த முகம் கண்ட பின்னே
சங்கரி வேறழகைக் காண மனமொப்பவில்லை
சிந்தனையில் நினைந்து உனையே துதித்தேன்
வந்தெனைக் காத்தருள்வாய் கேசவன் சோதரி
கண்டதையும் வேண்டியென் உளமலைபாயுதே
கண்டித்து சரியான பொருளை நீ தருவாயே
மண்ணில் வித விதமாய் கோலம் கொண்ட நாயகியே
எண் திசையும் புகழ் விளங்கும் நீயேயெனக்கருள்வாய்
சொந்த பந்தப் பிணியாலே நொந்த என் மனத்தை
பந்தமறச் செய்திடவே கண்ணனூர்ப் பதிவாழும்
சுந்தரியே உந்தன் கமல பதம் பணிந்தேன்
வந்தனை செய்துனைத் துதித்திட வரமருள்வாய்
No comments:
Post a Comment