"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது,
உன் அருகு இருந்து,
"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும்
வேளையில், நித்தம் நித்தம்
வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம்
மெல்ல மெல்லச் சொன்னால்,
வாய்முத்தம் சிந்திவிடுமோ?
நெல்வேலி வடிவன்னையே."
வாய் முத்துதிர்ந்திடுமோ…
பல்லவி
வாய் முத்துதிர்ந்திடுமோ வடிவாம்பிகையே
நீயே சொல்வாயே கேசவன் சோதரியே
அனுபல்லவி
ஓய்வின்றி உனையே துதித்திடும் என்னையே
நீயன்றி வேறு யார் பரிந்தணைத்திடுவார்
சரணம்
தாயே நீயுமுன் நாதன் நெல்லையப்பனும்
ஆய் முத்துப் பந்தலில் மெல்லணை மீது
ஓய்வாகத் தனிமையில் அருகிருக்கும் போது
சேயென் குறைகளை வேய்முத்தரிடம் சொன்னால்
No comments:
Post a Comment