தாயி மகமாயி…
பல்லவி
தாயி மகமாயி நீயே எந்தன் துணை
சேயெனவே நினைந்து உனைப்பணிந்தேன் தாயே
அனுபல்லவி
ஆயிரம் கண்ணுடையாளே கேசவன் சோதரி
சேயிழையுன்னருளால் கண் பெற்றோர் பல கோடி
சரணம்
தேய்பிறை நிலவணிந்த தேவி மகமாயி
ஓயாதுனைத் துதித்தேன் சமயபுரநாயகியே
ஆயி உனதடிமை பாடிய பாடல் கேட்பாய்
கோயில் படியேறி வந்தேன் நோய் நொடிகள் தீர்த்திடுவாய்
No comments:
Post a Comment