வாமே சைலசுதா புரச்ச விருஷப: பச்சாத்
ஸுரேந்த்ரதாய:
தைத்யாரிச்ச விதிச்ச
பார்ஸ்வ தலயோ:வாய்வாதி கோணேஷுச
ப்ருங்கி நாரத சண்ட பைரவ கணேச குஹ சாஸ்த்ரு வீரேஸ்வரா:
மத்யேஸ்வேத
ஸரோஜ கோமளருசிம் சம்பும் பஜே சாஸ்வதம்
வாமபாகத்தில் ஸ்ரீபார்வதி தேவி, எதிரில் நந்தி மற்றும் சிவ குமாரர்கள் ஆன ஸ்ரீகணபதி,ஸ்ரீஸ்கந்தர், ஸ்ரீசாஸ்தா,ஸ்ரீபைரவர், ஸ்ரீவீரபத்ரர்,சண்டேசர்,ரிஷிகள், தேவாசுரர்கள் சிவ பூத கணங்களால் சூழப்பட்டு நடுவில் அழகிய ப்ரகாச தாமரை மலர்வதை ஒத்த புன்னகையுடன் எப்போதும் சாஸ்வதமாக உள்ள (பிறவா யாக்கை பெரியோன்) பரமேஸ்வரனை நமஸ்கரிக்கிறேன்
Thanks : Shri. Siva Dhasa Sivachariyar. Thanks !அரவிந்த் சுப்பிரமணியம்
கர்பவாசமறியாத…..
பல்லவி
கர்பவாசமறியாத காமேச்வரனை
சர்ப்ப பூஷணனை சதா துதித்தேன்
அனுபல்லவி
நிர்குண சற்குண நமச்சிவாயனை
சர்வேச்வரனைக் கேசவன் நேசனை
துரிதம்
நந்தி கணங்கள் கந்தன் கணபதி
சுராசுரருடன் சாஸ்தாவும் பைரவரும்
சண்டேச்வரரும் வீரபத்திரரும்
சூழ்ந்திருக்க நடுவிலமர்ந்து
சரணம்
பர்வதகுமாரி இடப்புறமிருக்க
அழகிய தாமரை மலர்வது போல
புன்னகையுடனே நடுவில் வீற்றிருக்கும்
பரமேச்வரனின் திருவடி பணிந்து
No comments:
Post a Comment