சங்கர் …..
பல்லவி
சங்கர் எத்தனை சங்கரடி அவர்
திங்களும் கங்கையுமணிந்த கடவுளடி
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் நேசனடி
அங்கயற்கண்ணியின் மனங்கவர் ஈசனடி
சரணம்
மங்கை உமையவளி்ன் பங்கிலுறைபவன்
அங்காரகன் பிணியை போக்கிய பரமசிவன்
வெங்கதிரோன் திங்கள் அங்கியைக் கண்களாய்
கொண்ட நீலகண்டன் சாம்பசதாசிவன்
தங்கநிற மேனியன் தக்கனையழித்தவன்
பங்கய மலர்ப்பாதன் பார்வதி நேசன்
அங்கிங்கெனாதபடி எங்குமிருப்பவன்
மங்காத புகழ் மேவும் கயிலாயவாசன்
No comments:
Post a Comment