ஶ்ரீஶாம்ப பரமேஶ்வர வைபவம் :
மஹாஶிவராத்ரி சிறப்புப் பதிவு :
"உத்³யச்சந்த்³ரஸமாநதீ³ப்திமம்ருʼதானந்தை³கஹேதும்ʼ பரம்ʼ
சித்³ரூபம்ʼ பு⁴வனைகஸ்ருʼஷ்டிப்ரலயோத்³பூ⁴தைகரக்ஷாபரம் .
கோடீ சந்த்³ரக³லத்ஸுதா⁴த்³பு⁴ததனும்ʼ ஹாராதி³பூ⁴ஷோஜ்ஜ்வலம்ʼ
ஶுலம்ʼ க²ட்³க³வரௌ ததா²ப⁴யகரம்ʼ காமேஶ்வரம்ʼ பா⁴வயே"
- விஶ்வஸார தந்த்ரார்கத ஶ்ரீமஹாகாமேஶ்வர த்யானம்
"உதித்து வரும் சந்த்ரனை போல் ப்ரகாஶிக்கக்கூடிய அம்ருத மயமான தேஜஸைக் கொண்டவரும், ஸர்வாநந்தமய மஹாசக்ரத்தில் அமர்ந்திருக்கும் ஆனந்த வடிவினரும், பரமானந்தத்திற்கு காரணபூதராய் விளங்கக்கூடியவரும், ஸர்வத்திற்கும் மேம்பட்ட பரப்ரஹ்மமும், பரஞான வடிவினரும், உலகங்களை உண்டாக்கி, ரக்ஷித்து, அழித்தருளும் ஜகத் காரண மூர்த்தியும், ப்ராகஶிக்க்கூடிய அழகிய கண்ட ப்ரதேஶத்தை உடையவரும், ஹாரம் முதற்கொண்ட ஆபரணங்களாலே ஜ்வவிக்கக்கூடியவரும், ஶூலம், கட்கம், வரம், அபயம் ஆகியவற்றை தன் திருக்கரங்களில் தாங்கியவருமான ஸாக்ஷாத் ஶ்ரீமஹாகாமேஶ்வரரையே ஆத்மஸ்வரூபமாக பாவிக்கிறேன்."
"ஶ்ரீநாதாதி குருக்ரமைக ஸுலபம் ஶ்ரீராஜராஜேஶ்வரம்
ஶ்ரீசக்ராக்ருதி ஶோனசைல வபுஷம் ஶ்ரீஷோடஷார்ணாத்மகம்
ஶ்ரீஷோடாதி ஷடத்வ ஸௌத ஸதனம் ப்ரஹ்மாண்ட கோட்யூர்த்வத:
க்ரீடந்தம் ஶ்ருதி வாககோசர பதம் ஸேவே பரம் தைவதம்"
-- ஶ்ரீஅருணாசலாஷ்டகம் 1
"ஶ்ரீநாதர் முதற்கொண்ட குருமண்டல மூர்த்தங்களால் உபாஸிக்கப்ட்டு அடையப்பட்ட ஸுலபரும், ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேஶ்வரரும், ஶ்ரீசக்ரத்தின் வடிவான அருணாசலம் எனும் திருவண்ணாமலையே தன்னுடைய வடிவாய் உடையவரும், ஶ்ரீமஹாஷோடஶி எனும் மஹாமந்த்ர வடிவினரும், ப்ரஹ்மாண்ட கோடிகளுக்கு மேல் விளையாடக்கூடியவரும், வேதவசனங்களாலே அடையமுடியாத ஸ்தானத்தை உடையவருமான ஶ்ரீஅருணாசலேஶ்வர மஹாகாமேஶ்வரரையே பரதைவத்தையே ஸ்மரிப்போம்!!"
"மத்யே ஸௌத மஹாபயோநிதி மணித்வீப ப்ரபா விஸ்புரத்
பாலஸ்பீதி மதத்துரோத்தர நடத் பாடீர வாடீ வ்ருதே
சிந்தாரத்ன மய ப்ரபோத ஸதனே ஸிம்ஹாஸனே ஸம்ஸ்திதம்
ஸேவேத் அபீதகுசாம்பிகா ஸமேதம் அநிஷம் ஶோணாத்ரி நாதம் பஜே"
-- அருணாசலாஷ்டகம் 5
"அம்ருதக் கடலின் மத்தியிலே, மணித்வீபத்திலே, காற்றினாலே அசைந்தாடுகிற பாடலி வ்ருக்ஷ வாடிகளையுடைய சிந்தாமணி க்ருஹத்தின் மத்தியிலே, ஶ்ரீசக்ரமயமான அழகிய ஸிம்ஹாஸனத்திலே, ப்ரகாசிக்கக்கூடியவரும், ஶ்ரீமத் அபீதகுசாம்பிகையான ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்தரி ஸமேதரும், ஶ்ரீமஹாகாமேஶரும், ஶ்ரீசோணாத்ரியின் நாதருமான அருணாசலேஶ்வரரையே ஸேவிப்போம்!!"
ஹ்ருத்யத் காமகலா கலாப ரஸிகம் ஶோணாத்ரி நாதம் பஜே"
அருணாசலாஷ்டகம் 6
"ஹ்ருதயத்தின் மத்தியில் ஸாக்ஷாத் ஶ்ரீமஹாகாகலா மஹாமந்த்ர வடிவாய் விளங்கும் ஶோணாத்ரி நாதரை பஜிப்போம்!!"
"ஶ்ரீநாத பரிபூஜிதாய ஶ்ரீபுரைக நிவாஸினே
ஶ்ரீஹம்ஸ நடனேஶ்வராய ஶ்ரீவித்யாத்மக ரூபிணே
ஶ்ரீவித்யாச்சாதித ஹ்ருதயாய ஶ்ரீவித்யா ஹம்ஸ ஸம்புட:
ஶ்ரீவித்யா பரிதானாக்யாய ஶ்ரீபூஜித பதாம்புஜ:
ஶ்ரீவித்யாயாஸ் த்ரிகண்டாக்ய ஸோமாஸ்கந்த ஸ்வரூபிணே"
- ஶ்ரீத்யாகராஜ முசுகுந்த ஸஹஸ்ர நாமம்
"ஶ்ரீநாதரான திவ்யௌக குருவரரால் பூஜிக்கப்பட்டவரும், ஶ்ரீபுரமாம் திருவாரூரில் வஸிப்பவரும், ஶ்ரீஹம்ஸ நடனேஶ்வரரும், ஸாக்ஷாத் ஶ்ரீவித்யையின் ஸ்வரூபத்திலே விளங்கக்கூடியவரும்,ஶ்ரீவித்யையை தன் ஹ்ருதயத்திலே தாங்குபவரும்,
த்ரிகண்டங்களான வாக்பவம், காமராஜம், ஶக்தி என்பவைகளைக் கொண்ட ஶ்ரீவித்யா பஞ்சதஶாக்ஷரி எனும் மஹாமந்த்ரத்தின் வடிவான ஶ்ரீஸோமாஸ்கந்த விக்ரஹத்தின் ஸ்வரூபியாக விளங்கக்கூடிய ஶ்ரீஆநந்த த்யாகேஶ மூர்த்திக்கே அனேக நமஸ்காரங்கள்!!" -- மயிலாடுதுறை ராகவன்
புவனம்…..
பல்லவி
புவனம் போற்றும் சாம்ப பரமேச்வரனை
சிவனைக் கேசவன் நேசனைத்துதித்தேன்
அனுபல்லவி
தவழ்ந்து வரும் நிலவின் அமுதகலையை
உவந்தணிந்திருக்கும் ஆனந்தமூர்த்தியை
சரணம்
கவனமுடன் உலகைப் படைத்தும் காத்தும்
அவனேயதை அழிக்கும் உலகநாயகனை
சிவமே அனைத்துமென உலகோர்க்குணர்த்தும்
சிவமயமானவனைக்கருணாமூர்த்தியை
நவமணிமாலைகள் ஜொலிக்கும் கழுத்துடன்
பவபயம் போக்கிடும் அபயகரத்தானை
தவசீலருக்கருளும் வரந்தரும் கரத்தானை
சிவ சூலம் வாளேந்தும் சிவகாமேச்வரனை
குவலயம் கொண்டாடும் குரு நாரதரும்
தவசீலர்களும் பணிந்தடைந்த மூர்த்தியை
அவனியோர் போற்றும் அருணாச்சலனை
சிவமயமான அண்ணாமலையானை
சிவமெனுமீரெட்டு மந்திரப் பொருளை
மறைபொருளுமறியாத இடத்திலிருப்பவனை
அலகிலா விளையாடல் பல புரிபவனை
அருணாச்சலேச்வரனை மகாதேவனை
அமுதக் கடல் நடுவே அழகு மணித்தீவில்
பாடலி மரக்காற்றுடைய சிந்தாமணி வீட்டில்
திருச்சக்கரமெனும் சிம்மாசனந்தனிலே
உண்ணாமுலையுடனிருக்கும் அண்ணாமலையானை
சிவபரம்பொருளான திருவாரூர் வளர்
சிவ சோமஸ்கந்தனை ஹம்ஸ நடேசனை
ஶ்ரீவித்யா மூர்த்தியை குருநாதர் துதித்தவனை
சிவபரமானந்த தியாகேசமூர்த்தியை
No comments:
Post a Comment