Monday, 28 February 2022

மாசுடைய

 ஆசையறாய் பாசம் விடாய் ஆனசிவ பூசை பண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் - சீ சீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய் -


                                                                மாசுடைய…..                                                                 


                                                                    பல்லவி

                                                மாசுடைய மனமே உனக்கென்ன தகுதி

                                                கேசவன் நேசன் சிவபெருமானருள் பெறவே

                                                                  அனுபல்லவி

                                                வாச மலர் தூவி அவனருள் வேண்டாத

                                                தேசுடைய அவன் நாமம் நாவார உரைக்காத

                                                                      சரணம்

                                                 ஆசாபாசங்கள் எதையும் தொலைக்காத

                                                 ஈசன் ஜந்தெழுத்தான் நாமங்கள் நினையாத

                                                 ஆசை கோபம் நீச குணம் தவிர்க்காத

                                                 பூசைகள்  செய்யாத சிவனைத் துதிக்காத

                                     

புவனம்….

 ஶ்ரீஶாம்ப பரமேஶ்வர வைபவம் :

மஹாஶிவராத்ரி சிறப்புப் பதிவு :

"உத்³யச்சந்த்³ரஸமாநதீ³ப்திமம்ருʼதானந்தை³கஹேதும்ʼ பரம்ʼ

சித்³ரூபம்ʼ பு⁴வனைகஸ்ருʼஷ்டிப்ரலயோத்³பூ⁴தைகரக்ஷாபரம் .

கோடீ சந்த்³ரக³லத்ஸுதா⁴த்³பு⁴ததனும்ʼ ஹாராதி³பூ⁴ஷோஜ்ஜ்வலம்ʼ

ஶுலம்ʼ க²ட்³க³வரௌ ததா²ப⁴யகரம்ʼ காமேஶ்வரம்ʼ பா⁴வயே"

- விஶ்வஸார தந்த்ரார்கத ஶ்ரீமஹாகாமேஶ்வர த்யானம்

"உதித்து வரும் சந்த்ரனை போல் ப்ரகாஶிக்கக்கூடிய அம்ருத மயமான தேஜஸைக் கொண்டவரும், ஸர்வாநந்தமய மஹாசக்ரத்தில் அமர்ந்திருக்கும் ஆனந்த வடிவினரும், பரமானந்தத்திற்கு காரணபூதராய் விளங்கக்கூடியவரும், ஸர்வத்திற்கும் மேம்பட்ட பரப்ரஹ்மமும், பரஞான வடிவினரும், உலகங்களை உண்டாக்கி, ரக்ஷித்து, அழித்தருளும் ஜகத் காரண மூர்த்தியும், ப்ராகஶிக்க்கூடிய அழகிய கண்ட ப்ரதேஶத்தை உடையவரும், ஹாரம் முதற்கொண்ட ஆபரணங்களாலே ஜ்வவிக்கக்கூடியவரும், ஶூலம், கட்கம், வரம், அபயம் ஆகியவற்றை தன் திருக்கரங்களில் தாங்கியவருமான ஸாக்ஷாத் ஶ்ரீமஹாகாமேஶ்வரரையே ஆத்மஸ்வரூபமாக பாவிக்கிறேன்."

"ஶ்ரீநாதாதி குருக்ரமைக ஸுலபம் ஶ்ரீராஜராஜேஶ்வரம்

ஶ்ரீசக்ராக்ருதி ஶோனசைல வபுஷம் ஶ்ரீஷோடஷார்ணாத்மகம்

ஶ்ரீஷோடாதி ஷடத்வ ஸௌத ஸதனம் ப்ரஹ்மாண்ட கோட்யூர்த்வத:

க்ரீடந்தம் ஶ்ருதி வாககோசர பதம் ஸேவே பரம் தைவதம்"

-- ஶ்ரீஅருணாசலாஷ்டகம் 1

"ஶ்ரீநாதர் முதற்கொண்ட குருமண்டல மூர்த்தங்களால் உபாஸிக்கப்ட்டு அடையப்பட்ட ஸுலபரும், ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேஶ்வரரும், ஶ்ரீசக்ரத்தின் வடிவான அருணாசலம் எனும் திருவண்ணாமலையே தன்னுடைய வடிவாய் உடையவரும், ஶ்ரீமஹாஷோடஶி எனும் மஹாமந்த்ர வடிவினரும், ப்ரஹ்மாண்ட கோடிகளுக்கு மேல் விளையாடக்கூடியவரும், வேதவசனங்களாலே அடையமுடியாத ஸ்தானத்தை உடையவருமான ஶ்ரீஅருணாசலேஶ்வர மஹாகாமேஶ்வரரையே பரதைவத்தையே ஸ்மரிப்போம்!!"

"மத்யே ஸௌத மஹாபயோநிதி மணித்வீப ப்ரபா விஸ்புரத்

பாலஸ்பீதி மதத்துரோத்தர நடத் பாடீர வாடீ வ்ருதே

சிந்தாரத்ன மய ப்ரபோத ஸதனே ஸிம்ஹாஸனே ஸம்ஸ்திதம்

ஸேவேத் அபீதகுசாம்பிகா ஸமேதம் அநிஷம் ஶோணாத்ரி நாதம் பஜே"

-- அருணாசலாஷ்டகம் 5

"அம்ருதக் கடலின் மத்தியிலே, மணித்வீபத்திலே, காற்றினாலே அசைந்தாடுகிற பாடலி வ்ருக்ஷ வாடிகளையுடைய சிந்தாமணி க்ருஹத்தின் மத்தியிலே, ஶ்ரீசக்ரமயமான அழகிய ஸிம்ஹாஸனத்திலே, ப்ரகாசிக்கக்கூடியவரும், ஶ்ரீமத் அபீதகுசாம்பிகையான ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்தரி ஸமேதரும், ஶ்ரீமஹாகாமேஶரும், ஶ்ரீசோணாத்ரியின் நாதருமான அருணாசலேஶ்வரரையே ஸேவிப்போம்!!"

ஹ்ருத்யத் காமகலா கலாப ரஸிகம் ஶோணாத்ரி நாதம் பஜே"

அருணாசலாஷ்டகம் 6

"ஹ்ருதயத்தின் மத்தியில் ஸாக்ஷாத் ஶ்ரீமஹாகாகலா மஹாமந்த்ர வடிவாய் விளங்கும் ஶோணாத்ரி நாதரை பஜிப்போம்!!"

"ஶ்ரீநாத பரிபூஜிதாய ஶ்ரீபுரைக நிவாஸினே

ஶ்ரீஹம்ஸ நடனேஶ்வராய ஶ்ரீவித்யாத்மக ரூபிணே

ஶ்ரீவித்யாச்சாதித ஹ்ருதயாய ஶ்ரீவித்யா ஹம்ஸ ஸம்புட:

ஶ்ரீவித்யா பரிதானாக்யாய ஶ்ரீபூஜித பதாம்புஜ:

ஶ்ரீவித்யாயாஸ் த்ரிகண்டாக்ய ஸோமாஸ்கந்த ஸ்வரூபிணே"

- ஶ்ரீத்யாகராஜ முசுகுந்த ஸஹஸ்ர நாமம்

"ஶ்ரீநாதரான திவ்யௌக குருவரரால் பூஜிக்கப்பட்டவரும், ஶ்ரீபுரமாம் திருவாரூரில் வஸிப்பவரும், ஶ்ரீஹம்ஸ நடனேஶ்வரரும், ஸாக்ஷாத் ஶ்ரீவித்யையின் ஸ்வரூபத்திலே விளங்கக்கூடியவரும்,ஶ்ரீவித்யையை தன் ஹ்ருதயத்திலே தாங்குபவரும், 

த்ரிகண்டங்களான வாக்பவம், காமராஜம், ஶக்தி என்பவைகளைக் கொண்ட ஶ்ரீவித்யா பஞ்சதஶாக்ஷரி எனும் மஹாமந்த்ரத்தின் வடிவான ஶ்ரீஸோமாஸ்கந்த விக்ரஹத்தின் ஸ்வரூபியாக விளங்கக்கூடிய ஶ்ரீஆநந்த த்யாகேஶ மூர்த்திக்கே அனேக நமஸ்காரங்கள்!!" -- மயிலாடுதுறை ராகவன்


                                                  புவனம்…..


                                                        பல்லவி

                                      புவனம் போற்றும் சாம்ப பரமேச்வரனை

                                      சிவனைக் கேசவன் நேசனைத்துதித்தேன்

                                                      அனுபல்லவி

                                      தவழ்ந்து வரும் நிலவின் அமுதகலையை

                                      உவந்தணிந்திருக்கும் ஆனந்தமூர்த்தியை

                                                             சரணம்

                                      கவனமுடன் உலகைப் படைத்தும் காத்தும்

                                      அவனேயதை அழிக்கும் உலகநாயகனை                                      

                                      சிவமே அனைத்துமென உலகோர்க்குணர்த்தும்

                                      சிவமயமானவனைக்கருணாமூர்த்தியை


                                      நவமணிமாலைகள் ஜொலிக்கும் கழுத்துடன்

                                      பவபயம் போக்கிடும் அபயகரத்தானை

                                      தவசீலருக்கருளும் வரந்தரும் கரத்தானை                                      

                                      சிவ சூலம் வாளேந்தும் சிவகாமேச்வரனை


                                      குவலயம் கொண்டாடும் குரு நாரதரும்

                                      தவசீலர்களும் பணிந்தடைந்த மூர்த்தியை

                                      அவனியோர் போற்றும் அருணாச்சலனை

                                      சிவமயமான அண்ணாமலையானை


                                      சிவமெனுமீரெட்டு மந்திரப் பொருளை

                                      மறைபொருளுமறியாத இடத்திலிருப்பவனை

                                      அலகிலா விளையாடல் பல புரிபவனை

                                      அருணாச்சலேச்வரனை மகாதேவனை      

       

                                      அமுதக் கடல் நடுவே அழகு மணித்தீவில்

                                      பாடலி மரக்காற்றுடைய சிந்தாமணி வீட்டில்

                                      திருச்சக்கரமெனும்  சிம்மாசனந்தனிலே

                                      உண்ணாமுலையுடனிருக்கும் அண்ணாமலையானை


                                      சிவபரம்பொருளான திருவாரூர் வளர்

                                      சிவ சோமஸ்கந்தனை ஹம்ஸ நடேசனை

                                      ஶ்ரீவித்யா மூர்த்தியை குருநாதர் துதித்தவனை

                                      சிவபரமானந்த தியாகேசமூர்த்தியை


                                      

                                       

                                                                               


         

                                       

                                      

                                      

சதா சிவனை

 

                                                    சதா சிவனை……


                                                         பல்லவி

                                        சதா சிவனை சதா துதி மனமே — ( தினமே) ( சாம்ப)

                                        இதம் தருமினிய கேசவன் நேசனை

                                                        அனுபல்லவி

                                       பதாரவிந்தம் பணிவோர்க்கருள்பவன்

                                       வதாரண்யேச்வரன் வருமிடர் காப்பவன்                                       

                                                             சரணம்                                      

                                       நிதானமுடனவன்  திருவிளையாடல்

                                       கதாம்ருதம் பருகி அவன் புகழ் பாடி

                                       சுதாகரன் கலையை சூடிய பெருமான்

                                       உதார சீலன் ஊழிமுதல்வன்

                                       


செம்பொன் மேனியனை…..

 

      त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।

   उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्



                                               செம்பொன் மேனியனை…..


                                                            பல்லவி

                                       செம்பொன் மேனியனை சாம்பசதாசிவனை

                                       பெம்மான் சிவனை மனமாரத்துதித்தேன்

                                                            அனுபல்லவி

                                       அம்புய நாபன் கேசவன் நேசனை

                                        கும்பமுனிக்கருள் செய்த ஈசனை

                                                                சரணம்

                                       தும்புரு நாரதர் சுகசனகாதியர்

                                       அம்புயத்தமரும் பிரமனுமிந்திரனும்

                                        உம்பரும் முனிவரும் கரம் பணிந்தேத்தும்                                                                         

                                       அம்புலி பிறையணிந்த மகாதேவனை


                                       நம்பித்துதித்திடுமன்பர்க்கருள் தரும்

                                       அம்பிகை கற்பகவல்லி மனங்கவர் 

                                       அம்பலவாணனை கபாலீச்வரனை       

                                       வெம்பவக்கடலினைக் கடந்திட வேண்டியே                                

                                        

                                       

                                        

                                       

Sunday, 27 February 2022

காணுமிடமெல்லாமுன்

    


        காணுமிடமெல்லாமுன்….


                        பல்லவி

   காணுமிடமெல்லாமுன் அழகு முகம்

   கணபதியே உந்தன் ஆனைமுகம்

                     அனுபல்லவி

   தூணில் கோயில் கருவறையிலுன் முகம்

   தோணுமென் மனத்திலும் 

             தெரியுமுன் முகம்

                         சரணம்

   பேணுமடியார் மனத்திலுமுன் முகம்

   வேணு கேசவன் மருகா உன் வேழமுகம்

   தாணுமாலயனும் துதிக்கும் திருமுகம்

   காணிப்பாக்கம் தனிலுறையும் கரிமுகம்

திரிபுரசுந்தரியே

 திரிபுர சுந்தரி! முல்லைப் பற்களுடையவளே! சனந்தனர் ஆகியோரால் வந்திக்கப் பெற்றவளே! தாயே! பொன்னங்கத்தினளே! தேவி!

  • உன்னை வருணிக்க பிரமன் முதலான வானோருக்காகிலும் தரமா? நான் எம்மாத்திரம்? 
    • கலகலவென்றுள்ள முகக் களையினைக் கண்டு, அல்லியரசன் புவிக்கு வாரானாயினன்
    • ஒளிருமுனது எழிலினைக் கண்டு, அன்றே, காதல் மன்னன் காணாமற்போயினன்;
    • உறுதியான உனது மாட்சிமையினைக் கண்டு, கடலரசன் சலனமற்ற உருவத்தோனாயினன்; 
    • பலமான தீரத்தினைக் கண்டு, பொன் மலையோன், தான் சிலை வடிவாகினன்; 
    • கண்களைக் கண்டு வெட்கி, கெண்டை மீன்கள், கடல் வாசம் செய்யலாயின; 
    • உனது புன்னகையின் ஒளி பட்டு, சிவன் ஒப்பற்ற தூயோனாகினன்; 
    • மின்னும் நகைகளையும் ஆடையின் ஒளியினையும், மின்னல்கள் கண்டு, நிமிடமும் நில்லாதாயின;
    • உனது குரலைச் செவி மடுத்து, வாணி கணவனின் நாவினில், தான் புகலாயிற்று; 
    • புனிதப்படுத்தும் விருதினைக் கண்டு, தொண்டர்களின் பாவங்கள் ஓடலாயின;
    • எவ்வமயமும், உனது தயையினால், நற்கவிகள் அனைத்து காவியங்களையும் இயற்றலாயினர்; 
    • மா மணாளனின் தங்கையென, மகிழ்ச்சியுடன், சான்றோர் பகரலாயினர்;
    • உள்ளத்தினில் உணர்ந்து, உனது திருவடியினில், தியாகராசன், பேறெனக் கொள்ளலாயினன்.
    
       

                                                                 திரிபுரசுந்தரியே…..


                                                                         பல்லவி

                                                    திரிபுரசுந்தரியே பொன்மயமானவளே
                                                    பரிமளமேயுனைநான்  வர்ணிக்க இயலுமோ

                                                                     அனுபல்லவி

                                                    சரி நிகர் சமமாய் எவருமில்லாதவளே
                                                    விரிசடையோன் மடியமர்ந்த கிரியரசன் மகளே
                                                                                                
                                                                          சரணம்
                                
                                                   நான்கு முகமுடைய பிரமனுக்குமியலவில்லை
                                                   ஐந்து முகம் கொண்ட சங்கரனுமறியவில்லை
                                                  ஆறுமுகத்தோனுக்கு எடுத்தியம்பத் தெரியவில்லை
                                                  ஆயிரம் நாவுடைய அனந்தனுக்கும் முடியவில்லை
               
                                                  திங்கள் தன் பிறைதந்து பேசாது மௌனமானான்
                                                  அங்கமில் மதனுமுன்னெழில் கண்டு மறைந்தான்
                                                  பங்கயமுன் உறுதி கண்டு கடலரசனலையிழந்தான்
                                                  பலமுடைய வடிவு கண்டு பொன்மலையும் சிலையானான்                                      
                                                   
                                                  கண்ணழகு கண்டு மீன்கள் அலைகடலில் மறைந்தது
                                                  புன்னகை  ஒளியில் சிவன் மின்னலென வெளிச்சமானான்        
                                                  மின்னுமாபரணமும் ஆடையின் ஒளியும் 
                                                  மின்னலைப் பழித்து இல்லாமல் செய்தன
           
                                                 பாரதியுன் குரல் கேட்டு நாதன் நாவிலமர்ந்தாள்
                                                 பாவாணர் காவியங்கள் படைக்கத்தொடங்கினர்
                                                 யாராலும் முழுமையாய் சொல்லவொண்ணாப் பேரழகே
                                                 பார் புகழ்  கேசவன் சோதரியே  ஶ்ரீலலிதா
                                                 

அஞ்சு முகம்

 


                                               அஞ்சு முகம்…..


                                                       பல்லவி

                                         அஞ்சு முகம் காட்டும் கணபதியே

                                         கெஞ்சியுனைத்துதித்தேன் எனக்கருள்வாய்

                                                     அனுபல்லவி

                                         நஞ்சுண்டகண்டனும் அன்னை பார்வதியும்

                                         கொஞ்சிடுமைங்கரனே குமரனின் சோதரனே

                                                          சரணம்

                                         பஞ்சவர் நேசன் கேசவன் மருகனே

                                         வெஞ்சமரிலரக்கன் கஜமுகனை அழித்தவனே

                                         சஞ்சலமிடர் களையுமானை முகத்தோனே

                                         தஞ்சமடைந்தோரைக் காக்கும் கரிமுகனே                                                                                   

சீதாபதியே

 

                                                    சீதாபதியே…..


                                                                 பல்லவி

                                                     சீதாபதியே ஶ்ரீ ராமா

                                                     பாதாரவிந்தம் பணிந்தேன் எனக்கருள்வாய்

                                                                அனுபல்லவி

                                                     சாதாரணனென் குறை நீ கேளாயோ

                                                     மாதவனே கேசவனே தசரதன் மைந்தனே

                                                                   சரணம்

                                                     வேதாகமங்கள் புராணங்கள் போற்றும்

                                                     மேதாவி நீயே கோதண்டபாணியே

                                                     மாதா கோசலை கொஞ்சும் ரகுராமனே

                                                     நீதான் துணையென்று நம்பித் துதித்தேன்

                                                      

                              

                                                     

   

ஆச்சரியமானவளே

 பூச்சொரிதல் ஸ்பெஷல் ! 

சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே 'சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்' எனும் வாக்கிற்கிணங்க பிரத்யக்ஷ தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன். ‘சாதிச்சா சமயபுரம்' எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதங்கள் எண்ணிலடங்காதவை. கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர். மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறும். பூச்சொரிதல் நாள் முதல் 4 வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம். பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் 'மாரி' போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா. பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலைமுதல் இரவு வரை நடைபெறும்பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள். பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே. ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம். பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.


                                       ஆச்சரியமானவளே…..


                                                   பல்லவி

                              ஆச்சரியமானவளே சமயபுரத்தாளே

                              தீச்சட்டி ஏந்தி வரும் பக்தருக்கருள்பவளே

                                              அனுபல்லவி   

                              பூச்சொரிதல் காண்பவளே கண்ணபுரம் மாரி   

                              பேச்செல்லாம் நீயே கேசவன் சோதரியே

                                                   சரணம்

                              மூச்செல்லாம் நீயே முத்துமாரித் தாயே

                              காச்சலெல்லாம் போக்கி நலமளிப்பவளே

                              ஏச்சுப் பேச்சில்லாத பேச்சி மகமாயி

                              கோச்சடையான் நாயகியே உன் பாதம் பணிந்தேன்

                                 

                                      

Saturday, 26 February 2022

எப்படி அழைத்தால்……

                                     

                                                   எப்படி அழைத்தால்……


                                                           பல்லவி

                                         எப்படி அழைத்தால் வருவாயோ முருகா

                                         செப்படி வித்தைகள் பல செய்பவனே

                                                      அனுபல்லவி

                                         கப்பிய கரிமுகன் சோதரனே குமரா

                                         சுப்பிரமணியனே கேசவன் மருகனே

                                                           சரணம்

                                          முப்பரமெரித்த சிவகுமரா என்றோ

                                          அப்பனுக்கோதிய குரபரனே எனவோ

                                          ஒப்புயர்வில்லாத சரவணபவனென்றோ

                                          இப்பிரபஞ்சம் போற்றும் ஆறுமுகனென்றோ

Friday, 25 February 2022

அழகன்

 

                                          அழகன்….


                                                         பல்லவி

                                   அழகன் கண்ணனை கண்ணாரக் கண்டேன்

                                   பழகு தமிழ் மொழியில் பாடல் புனைந்தேன்

                                                       அனுபல்லவி

                                   குழலேந்தும் கரங்களும் மயில்பீலிக் கொண்டையும்

                                   கழல்களில் தண்டையும் கால் கொலுசுமணிந்த

                                                            சரணம்

                                   அழகு மலர் மாலைகளும் அணி மணி ஆரங்களும்

                                   குழையணிந்த செவிகளும் பட்டுப் பீதாம்பரமும்

                                   அழகுடனணிந்தக் கேசவனை மாதவனை

                                   சுழல் சக்கரமேந்தும் வெண்ணையுண்ட வாயனை

                     

                                   

    

                                                          

என் பிழை…….

 மஹா சிவராத்திரி ஸ்பெஷல் ! 🙏ஓம்_நம சிவாய_சிவாய_நமஹ🙏

நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம். சுயநலம் அதிகரிக்கும் போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது. அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் *பட்டினத்தார்* இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பாடப்பெற்றது.

*கல்லாப் பிழை:*

*இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.*

*கருதாப்பிழை:*

*இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.*

*கசிந்துஉருகி நில்லாப்பிழை:*

*இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.*

*நினையாப்பிழை:*

*இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.*

*பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை:*

*முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.*

*துதியாப்பிழை:*

*தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?*

*தொழாப்பிழை:*

*தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.*


*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி*

*நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்*

*நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்*

*துதியாப் பிழையும் தொழாப் பிழையும்*

*எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே."*

என்பது அந்த அற்புதமான பாடல். தினமும் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா?

                                                     என் பிழை…….


                                                         பல்லவி

                                   என் பிழை பொறுத்தருள்வாய் கச்சி ஏகாம்பரனே       

                                   உன்னையே துதித்தேன் உமையொருபாகனே

                                                     அனுபல்லவி

                                   பன்னகாபரணனே பார்வதி நாயகனே

                                   பன்னக சயனன் கேசவன் நேசனே

                                                         சரணம்

                                   உன்னைப்போற்றிப் பாடும் நூல்கள்

                                   சொன்னபடி வாழாத கல்லாப்பிழையும்

                                   உன்னை நினையாத கருதாப் பிழையும்

                                   கசிந்துருகி மனமுன் மேல் நில்லாப் பிழையும்


                                   உன்னையெண்ணாத நினையாப்பிழையும்

                                   உன் புகழை பாடியுனைத் துதியாத பிழையும்

                                   உன்னைக் கரம் கூப்பி தொழாத பிழையும்

                                   என்னை வாட்டி வதைக்காமலீசனே

                                                         

                                                                      

                                     

பரிவுடைய….

 


                                                        பரிவுடைய….


                                                                    பல்லவி                                    

                                        பரிவுடைய ராமனின் திருநாமமுரைப்போர்க்கு

                                        அரியவனின் திருவருளனைத்தும் வந்து சேரும்

                                                                 அனுபல்லவி

                                        தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ

                                        கரியவன் கேசவனின் ஆயிரம் நாமங்களில்

                                                                     சரணம்

                                        கரிக்கும் காரிகைக்கும் அபயமளித்தவன் நாமம்            

                                        மரித்தலும் பிறத்தலுமில்லாமல் செய்யும் நாமம்       

                                        விரி சடையோன் சிவன் உமைக்குரைத்த  நாமம்      

                                        சரி நிகர் தனக்கொருவர் இல்லாதவன் நாமம்                      

தாயே பெருஞ்சேரி….

 #வசைமாலை

தெய்வத்தை மிக நெருக்கமாக பார்க்கும் நாம் அவர்களை புகழ்ந்து பாடுகிறோம். அதே போல் துயருரும் வேளையில் திட்டவும் செய்கிறோம் ... அதையே பாடல் வடிவாக அமைத்துள்ளேன். இசைமாலையை ஏற்பது போலவே #வசைமாலையையும் அவள் ஏற்பாள் ... இது எனது சொந்த அனுபவங்கள் கொண்டு எனது குலதெய்வமான பெருஞ்சேரி #மாரியம்மன் மீது எழுதப்பட்டது. ஆயினும் பொதுவாக அன்னை என்றே எல்லா இடங்களிலும் அமைந்துள்ளதும் அவள் விருப்பமே.

#பெருஞ்சேரி -- மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் மங்கைநல்லூர் என்ற கிராமத்தை அடுத்துள்ள கிராமம். இங்குள்ள வாகீஸ்வரர் வாக்கு வள்ளல் மயிலாடுதுறை நான்கு வள்ளல்களில் ஒருவர். #செம்பியன் மாதேவியாரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில். பெரிய கோவில் அருகிலேயே சிறிய தனிக்கோவிலாக இந்த அம்மையார் கோவில் உள்ளது... 

0. காப்பு

ஆற்றங்கரையருகில் அரசமரநிழலடியில்

வீற்றிருக்கும் வேழமுகத்தவனே உனைப்பணிந்தும்

ஆற்றாமல் உலகமெலாம் நிறைந்திருக்கும் உன்தாயை நான்பணிந்தும்

போற்றித்தான் என்ன பயன்கண்டேன் பூரணமே

1. "காவாய்" என நான் கடலிடைப்பட்ட

நாவாய் போல் அலைந்து கதறியழுதும்

மோவாய் முகம்தூக்கி நீயெனைப் பாராமல்

தாயாய் இருந்தென்ன தருமமோ நானறியேன்

2. பெரிதாக வாழ்பவர்கள் எனைச்சுற்றி மகிழ்ந்திருக்க

கரியாகி நான்கிடக்கும் வாழ்வுதனை நீசுமத்த

பேயென் நிலை கண்டால் பெரிதும் மனமிரங்கும்

தாயே உன் தயவு என்ன தருமமென்ன நானறியேன்

3. பட்டும் பலநகையும் படையலுடன் பெருஞ்சோறும்

கட்டுப்படுத்தியதோ அம்மா உன் கருணையதை

கெட்டி உனைப்பிடித்தும் கீழ்த்தரமாய் நானிருக்க

வட்டிபோல் நீமட்டும் வளர்ந்திருக்க நானறியேன்

4. ஊரில் உள்ள எல்லோர்க்கும் முத்தான மகவிருக்க

பாரில் எந்தன் தாய்க்கு மட்டும் நத்தளித்த நல்லவளே

காரிருளில் அலையவிட்ட கண்மணியே உன்னைப் பலர்

பேரோளியாய் போற்றுவதன் பின்கதையை நானறியேன்

https://m.facebook.com/story.php?story_fbid=4835408236578661&id=100003285965847

#வசைமாலை

5. கல்லென்று பலர்உரைத்தும் கருத்தில் அதை ஏற்காமல்

அல்லும் பகலும்எல்லாம் உனைத் துதித்தேன் - ஆனாலும்

புல்லொத்த வாழ்வுதனை புவியதனில் எனக்களித்த

வல்லவளே உன் வன்மம் என்னவம்மா நானறியேன்

6. ஊரே செழித்திருக்க உலகமெலாம் வாழ்ந்திருக்க

உற்றார் களித்திருக்க உன்மைந்தன் நான் மட்டும்

"பாரேன்" எனப்பலரும் கைகொட்டி மகிழ்ந்திருக்க

தாயே நீ செய்ததென்ன தருமமோ நானறியேன்

7. நித்தமுன்னை நான் கண்டு நித்தமுந்தன் பேர்சொல்லி

பித்தனைப்போல் நானிங்கே வாழ்ந்திருக்க

மத்தவரையெல்லாம் எனக்கு மேலேநீ வைத்திருக்க

பெத்தவளாய் நீயிருக்கும் பெருமையென்ன நானறியேன்

8. மாளாத செல்வமுடன் மற்றவர்கள் வாழ்ந்திருக்க

ஆளாகி நானிருந்தும் ஆதரவு இல்லாமல்

தாளாத துயரமுடன் தனயனிங்கே தனித்திருக்க

தாயே நீ சுகித்திருக்கும் தைரியத்தை நானறியேன்

9. செல்லக்குழந்தை கையில் செல்வத்தை வைத்திருந்தால்

செல்லாப்பொருள் தந்து செல்வத்தை பிடுங்குதற்போல்

கல்விக்கடல் தந்தென் வயதழகு வாலிபத்தை

இல்லாமல் செய்த தாயே உன் இதயத்தை நானறியேன்


                                 தாயே பெருஞ்சேரி….

                                               பல்லவி

                               தாயே பெருஞ்சேரி மாயே மாரியம்மா       

                              சேயென் குறை தீர்க்க நீயே வாருமம்மா      

                                             அனுல்லவி

                              காயாம்பூ வண்ணன் கேசவன் சோதரியே

                              ஓயாதுன் பதமே அனுதினமும் துதித்தேன்    

                                                காப்பு

                              தாயவளைப் பாடிடவே தயை வேண்டிப் பணிந்தேன்

                              நீயுமருள் தருவாய் அரசமரத்தடியிருக்கும்

                              சேயே கணபதியே வாரணமுகத்தோனே

                             ஆயபயனேதுமுண்டோ நானறியேன் பூரணமே

                                                 சரணம்

                              மூவருக்கும் முதலே ஆதி பழம் பொருளே

                              தாவி வந்துனையே தாயென்றே வேண்டினேன்

                              ஆவலுடன் பணிந்த எனை அரவணைத்துக் காக்காமல்

                              பாவியெனச் சொல்லி பரிதவிக்க விடலாமோ       

  

                              அருகிருப்போர் பலரும் ஆனந்தமாய் வாழ

                              உருகியுனைத்துதிக்கும் நான் மட்டும் கருகிடவே

                              சருகாகிக் கிடக்குமென் நிலைகண்டு நீயும்

                              கருணையின்றிப் பார்ப்பது தருமமோ முறையோ


                              ஆடையாபரணங்கள் அருஞ்சுவைப் படையல்கள்

                              மேடையில் கண்டுன் கடைக்கண் சென்றதுவோ

                              கோடையில் வறண்ட குளம் போல் நானிருக்க

                              ஓடையெனப் பெருகி நீயோடும் பொருளறியேன்


                              நாட்டிலுள்ள அனைவருக்கும் நல்லதொரு மகவிருக்க

                              வீட்டிலுள்ள தாய்க்கு மட்டும் சருகளித்த திருமகளே

                              வாட்டி வதைத்தலையவிட்ட கண்மணியே உன்னை இன்னும்

                              மேட்டிமையாய் போற்றும் கூற்றினை என் சொல்வேன்


                              சிலையென்று பலர் சொல்ல அதை நானுமேற்காமல்

                              விலையுயர்ந்த பொருளென்றே ராப்பகலுமுனைத்துதித்தேன்

                              அலைக்கழித்துலகில் விலையிலா வாழ்வளித்தாய்

                              குலமகளே உன் கோபம் என்னவென்று நான்றியேன்


                              சீருடனுற்றார் உலகோர் அனைவரும் வாழ்ந்திருக்க

                              பாரினில் மகிழ்ந்திருக்க உன் பிள்ளை நான் மட்டும்

                              நேரும் நெறியுமின்றி ஊர் சிரிக்க வாழ்வதென்ன

                              நேரிழையே தாயே தருமமிதுவோ சொல்


                              சித்தத்திலுனை நினைந்து நித்தமுமுனைத் துதித்தேன்

                              அத்தனை செய்த எனைப் பித்தனாயலையவிட்டு

                              மத்தவர்க்கருள் தந்து மெத்தனமாய் நீயிருந்தாய்

                              பெத்தவளே நீ செய்யும் செயலின் பொருளறியேன்


                              ஏராளம் பொருளுடனே மற்றவர்கள் இன்பமுடன்

                              தாராளமாகத் தரணியில் வாழ்ந்திருக்க

                              சீராளனுன் மகனோ துயருடனே தனித்திருக்க

                              நேரிழையே தாயேயுன் காரியத்தை என் சொல்வேன்


                              பிள்ளை கையில் பெரும் பொருள் வைத்திருந்தால்

                              கள்ளத்தனம் செய்து கைப் பொருளைப் பறிப்பதுபோல்

                              பள்ளி பெருங்கல்வி தந்தென் வாலிபமிளமை

                              அள்ளிச் சென்றதேன் தாயே  இன்றுவரை நானறியேன்                             


                            


        

                


                              

                               

                              

                    

     

                                                              

                              

                  


.....

Thursday, 24 February 2022

அடைக்கலமென……

 அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அன்னை காமாட்சி உமையே.....


ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ-

கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |

கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:

காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக: ||13||

               கடாக்ஷ சதகம்.

ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷமாகிற மேகமானது  எனது நாவாகிற  வயலில் தவறாமல் மாரியெனப் பெய்ததால் முளைத்தவைகளும், புத்திமான்களுக்கு அனுபவிக்கத்  தக்கவைகளுமாகிய மங்களகரமான கவிசக்தியாகிற சம்பா பயிர்களை  செழுமையாய் வளரச் செய்யட்டும். அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற ஒருத்தருக்கு ச்ரேஷ்டமான கவிதாசக்தி ஏற்படும் என்பது தாத்பர்யம்..

संस्कारतः किमपि कन्दलितान् रसज्ञ
केदारसीम्नि सुधियामुपभोगयोग्यान् 
कल्याणसूक्तिलहरीकलमाङ्कुरान्नः
कामाक्षि पक्ष्मलयतु त्वदपाङ्गमेघः 13

ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ
கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |
கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:
காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக: ||13||
காமாக்ஷியே! உன் கடைக்கண் அருளாம் மேகம் எனது நா வயலுள், தவறாமல் மாரியெனப் பெய்ததால், முளைத்தவைகளும், அறிவாளர்கள் உய்த்துணர்ந்து பயன்கொள்ளும்படியான, மங்களமான கவிதை புனையும் திறனால் நல்லுரைகளாம் பயிர்களை வளரச் செய்யட்டும்.
நாவாம் வயலினுள் நாரமுண் மேகமாய் நற்பொழிவு
தேவிகா மாட்சியுன் தேசாம்க டைவிழிச் செய்வதுவாம்;
மேவுமச் செம்மையால் மெய்ஞா னியர்கள் விதந்துணர
பாவினால் நல்லுரைகள் பல்கிடச் செய்வாய் பயிரென்றே
நாரம் - நீர்; தேசு - ஒளிர்; பல்கு - மிகுதியாக; விதந்து - சிறப்பாய்   



                                                                 அடைக்கலமென……


                                                                      பல்லவி

                                                   அடைக்கலமென உனையே சரணடைந்தேன் காமாக்ஷி
                                                   இடைமெலிந்தவளே காஞ்சிபுர நாயகியே

                                                                     அனுபல்லவி
                                                                                                                     
                                                   படைநடுங்கும் பாம்பணிந்த ஏகாம்பரேச்வரன்
                                                   விடைவாகனனிடமமர்ந்த ஈச்வரியே     
        
                                                                          சரணம்                                  
                                                                                                    
                                                  கடைக்கண்ணாமருள் மேகம் நாவென்னும் வயலில்
                                                  அடை மழையாய் பொழிந்து சம்பாப் பயிரென்னும்
                                                  இடைப்பயிராயறிஞர்கள் புகழ்ந்தேத்தும் கவி நானும்
                                                  படைக்கும் படிச் செய்தாயே கேசவன் சோதரியே
                                                   
                                                  
                 

Wednesday, 23 February 2022

வாய் முத்துதிர்ந்திடுமோ

 


"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது, 
     உன் அருகு இருந்து,
"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும் 
     வேளையில், நித்தம் நித்தம்
வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம் 
     மெல்ல மெல்லச் சொன்னால்,
வாய்முத்தம் சிந்திவிடுமோ? 
     நெல்வேலி வடிவன்னையே."



                                  வாய் முத்துதிர்ந்திடுமோ…


                                              பல்லவி
 
                          வாய் முத்துதிர்ந்திடுமோ வடிவாம்பிகையே
                          நீயே சொல்வாயே கேசவன் சோதரியே

                                            அனுபல்லவி
       
                          ஓய்வின்றி உனையே துதித்திடும் என்னையே
                          நீயன்றி வேறு யார் பரிந்தணைத்திடுவார்

                                                சரணம்

                          தாயே நீயுமுன் நாதன் நெல்லையப்பனும்
                          ஆய் முத்துப் பந்தலில் மெல்லணை மீது
                          ஓய்வாகத் தனிமையில் அருகிருக்கும் போது
                          சேயென் குறைகளை வேய்முத்தரிடம் சொன்னால்

ஶ்ரீ ராம நாமமே…..

 இராம நாம மகிமை... நமக்கு நன்மை   வரவேண்டுமானால்   'ராம  நாமத்தை'         இடைவிடாமல்   1.  கூறவேண்டும். நமது  ஒவ்வொரு  மூச்சும்    'ராம் 'ராம்'   என்றே  உட்சென்றும் ,  வெளியேறுதலும்  வேண்டும்.   

2. நாம்  அறியாமல்   செய்த தவறுக்கு  ராம நாமமே   மிகச்சிறந்த  பிராயசித்தம்.  அறிந்தே  செய்த              தவறானால்   அதற்கு வருந்துவதும் ,   தண்டனையை ஏற்பதுவும்,   பிராயசித்தமும்   ராம  நாமமே. காலால்  நடக்கும்  ஒவ்வொரு  அடியும்  'ராம் '  என்றே  நடக்கவேண்டும் .

3.  எல்லா விதமான  கஷ்டங்களுக்கும்  நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு  நோக்கி  செல்ல  செல்ல  மேற்கிலிருந்து  விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில்  கரைய  கரைய  துக்கத்திலிருந்து  விலகிசெல்கிறோம்.

 4. ' ராம  நாம'  ஜெபத்திற்கு  குரு கிடைக்கவேண்டும்  என்று  கால  தாமதம்  செய்தல்  கூடாது. ஏனெனில் 'ராம  நாமமே '  தன்னுள்  குருவையும்   கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில்  விழிப்பு  வந்தவுடனே  சொல்லவேண்டியது   'ராம நாமம்.'  எழுந்து  கடமைகளை  செய்யும்போதும்  சொல்லவேண்டியதும்  'ராம நாமம்.' அந்த  நாள்  நமக்கு  'ராம  நாம'  நாளாக  இருக்கவேண்டும்.

6. ' ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி  ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள்  தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும்  பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

7. எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம். இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே!   

8.  'ராம  நாமா'  எழுத  மனம், உடம்பு, கைகள்           ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம  நாமா'  சொல்ல   மனம்  மட்டும்  போதும்.

இதைதான்  "நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள் .

9. ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம  நாமா'    சொன்னால்  அந்த  பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு  சக்கரத்திலிருந்து  விடுபடுவார்கள். அந்த  வீட்டினில்  தெய்வீகம்  நிறைந்துவிடும். அதுவே  கோவிலாகும் .

10. எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம  நாமாவில்  அடங்கும்.  எல்லாவித  நோய்களுக்கும்  'ராம  நாமா' சிறந்த  மருந்து, துன்பங்களுக்கும்  அதுவே  முடிவு .

11. நமது  இலட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

12. நமது  பயணத்தில்  பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும். 

காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது ) ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.

13. பெண்களின்  மாதாந்திர  நாட்களிலும்  'ராம  நாமா' சொல்லுவதன்  மூலம்   அந்த  பிரபஞ்ச சக்தியிடமே  அடைக்கலமாகிறோம்.'ராம  நாமா'  சொல்ல  எந்த  ஒரு  விதியும்  இல்லை.  மனமிருந்தால்  மார்க்கமுண்டு. பெண்கள்  சமைக்கும்பொழுது  ராம நாமம்   சொல்லி சமைத்தால்,   அந்த  உணவே  ராம  பிரசாதமாகி ......அதை   உண்பவருக்கு  தூய  குணங்களையும் ,  நோயற்ற   தன்மையையும்  அவர்களது  உடல்  ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள்  இருப்பின்  குணமாகும். 

14. வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும். 

15. 'ராம  நாமாவை  உரக்க  சொல்லுங்கள்.   காற்றில்

ராம  நாம  அதிர்வு    பரவி,   உங்களை  சுற்றிலும்   காற்றில்  ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும்  மற்றவருக்குள்ளும்   அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை  மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்    தரும். சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு ..... அவைகளும்  மிக  உயர்ந்த  பிறவிகளை  பெறலாம்.  இதுவும்  சேவையே!  ..... யார்  அறிவர்?  நமது  முந்தய  பிறவிகளில்  நாமும்  'ராம  நாமா'  கேட்டு  கேட்டு  இப்போதைய  பிறவியினை  பெற  ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்  மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய  பலனை ..... ராமனே  அறிவான்.    'ராம  நாமா'  சொல்லும் பொழுது  ஏற்படும்  தூய  அதிர்வானது  காற்றில்  பதிந்துள்ள  மனிதர்களின்   தீய   எண்ணங்களால்  ஏற்பட்ட   தீய  அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை  அழித்து விடும்.  'ராம  நாமா  அதிர்வு  நமது   ரத்தத்தில்  உள்ள  DNA  மற்றும்  gene coding...இல்  உள்ள   குணங்களுக்கு  காரணமான ........கோபம் , வெறுப்பு,  பொய்,  பொறாமை , சூது,  போன்ற   தீய  குணங்களின்  தன்மைகளுக்கு  காரணமான....gene coding யை  அழித்து .........ராம  நாம  அதிர்வு  ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு  காரணமான   ராமரின்  குணங்களை  ஏற்படுத்தும்.('யத்  பாவோ  தத்  பவதி'--எதை  நினைக்கிறாயோ  அதுவே  ஆகிறாய்!)  'ராம  நாமா'  சொல்ல  சொல்ல  .........பரப்ரம்மமே  ஆகிவிடுகிறோம் .அகில  உலகையும்  வியாபித்து   காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய   சக்தியே  " ராம் ". அதுவே   உருவம்   கொண்டபோது ,  தசரத ராமனாக , சீதாராமானாக,  ரகுராமனாக ,  கோதண்ட ராமனாக  பெயருடன்  ( நாம ரூபமாக )  வந்தது. உண்மையில்  சத்தியமாம்   ஒரே  உண்மை  ராம்  ஒருவனே. ராம்  அனைத்திலும்  உள்ளான்,  அனைத்தும்   ராமில்  உள்ளன.  ராம்  ஒருவனே  உண்மையான ,  பேரன்பே  வடிவான  உணர்வுமய  வஸ்து .........பிரம்மம்  என்பதும்   அவனே ! எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர்   அனைத்தும்  ராமில்  ஒடுங்கவேண்டும். இடைவிடாது  ராம  நாமத்தை  ஜெபித்து  வந்தால்  அழியா  இன்பத்தை  ராம்  அருள்வான்  என ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்    தமது  தந்தையிடம்  உபதேசமும்  பெற்று  ராம  நாமத்தில்  கரைந்து  ராம  ரசமாய்,  அதன்  மயமாய்    தானே   ஆனார்.

16. நமது  ஒரே  அடைக்கலம் 'ராம  நாமா'.  அதுவே  நம்மை  சம்சார  சாகரத்தில்  இருந்து கரையேற்றும். பிறவித்தளையை  அறுக்கும் .

17. மற்ற  எல்லா  தர்மங்களும்  ஒன்று  பாவத்தை  நீக்கும் .  மற்ற  ஒன்று  புண்ணியத்தை  தரும். ஆனால்  'ராம  நாமா'  ஒன்றே  பாவத்தை  அறுத்து, புண்ணியமும்  அர்ப்பணமாகி  பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி )    முக்தி  தரும்.

18. 'ராம  நாமா'  மட்டுமே  நன்மையே  கொண்டு வந்து  தரும் .  மருந்தின்  தன்மை  தெரியாமல்  சாப்பிட்டாலும்  அது  நோயினை  குணப்படுத்திவிடும்.  அது போல  'ராம  நாமா' வும்  சொல்ல சொல்ல  பிறவி  நோயை, துக்க  நோயை , ஆசை  என்ற   சம்சார  நோயை  அழித்துவிடும்.

19. நமது  கைகளால்  எது  கொடுத்தாலும்,  அது  நமது  தலைவனாகிய  ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில்  உள்ள  மனித வடிவில்  உள்ள எஜமான்  ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம்.  எது ,  எதனை  எவரிடம்  இருந்து  பெற்றாலும்  நமது  அன்னையாகிய  ஸ்ரீ ராமனே ( எதிரில்  உள்ள  மனித  வடிவில் )    கருணையுடனும், அன்புடனும் நமது    நன்மைக்காக    தருகிறான்.  இந்த  உணர்வு  பெருக, பெருக   ஸ்ரீ ராமனே   தந்து , வாங்குகிறான். ( எதிரில்  உள்ள  மனிதரை  கவனிக்காமல்   அவரின் ....அந்தராத்மவுடனே   பேசுகிறோம்.......ராம்!  அன்னையே   இந்த  உடலுள்   இருந்து  நீயே  பேசி, இயங்கி,  செயல்படுகிறாய் ......என  வணங்க,  நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன்  ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன்  ஸ்ரீ ராமன்.

20. 'ராம  நாமா' சொல்ல ,  சொல்ல  நிகழும்  எல்லா  செயல்களும் ,  நிகழ்ச்சிகளுக்கும்    ' அந்த  ஒன்றே !'  காரணமாகிறது என்பதும் ...... எல்லாம்  அந்த  பிரம்மத்தின்  விளையாட்டே !.......என்பதும்  உள்ளங்கை  நெல்லிக்கனியாய்  உணரப்படும் .

21.'ராம  நாமா'   சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன்  மூலம்  .....  பார்ப்பது  ராம்  ,  பார்வை  ராம்,  பார்க்கப்படுவது  ராம்,  கேட்பது  ராம், கேள்வி  ராம்,  கேட்கபடுவது  ராம்,  புலன்கள்  ராம்,   உணர்வது  ராம்,  உணரபடுவது  ராம், உணர்வு ராம், இந்த   பிரபஞ்சம்  ராம்,  இந்த  மனம்  ராம் , புத்தி  ராம்,  உடலும்  ராம்,  ஆன்மா  ராம்,  24   தத்துவங்கள்  ராம் ,  ..... .........நன்மை,   தீமை , இன்பம்  துன்பம் ,  எல்லாம்  ராம் ,   எல்லாம்   ராம் , எல்லாம்  ராம். இத்தகைய   .'ராம  நாமா' வில்  பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........( ஏகாக்கிரக   சித்தமாக ) அனைத்தும்  ஒன்றாக   அறிவதே  உண்மையான  அறிவு.   அனைத்தும்  ஒன்றாக ......ராமனாக   ( ஆத்மா  ராமனாக )  பார்ப்பதுவே  ......... எல்லா  எண்ணங்கள் ....... எல்லா  செயல்கள் ........எல்லா  உணர்ச்சிகளிலும் ...........இறை  உணர்வை  உணர்வதுவே ............இந்த  பிறவியின்  பயனாகும்.

‬: பகவத் கீதை  : அத் : 2 - 17

" இந்த வையகம் முழுதும் பரந்து விரிந்து நிற்கும் பொருள் .  அழிவே இல்லாதது என்பதை அறிந்து கொள் ;  அது தீங்கற்றது ; அதனை அழிக்க யாராலும் முடியாது."..


                                                    ஶ்ரீ ராம நாமமே…..


                                                             பல்லவி

                                            ஶ்ரீராம நாமமே  அனைத்தையும் நமக்கருளும்

                                            ஆராவமுதன் கேசவனின் நாமமந்த

                                                           அனுபல்லவி

                                            ஓராயிரம் நாமமுண்டென்ற போதும்

                                            தீரா வினை தீர்க்கும் திருவருள் சேர்க்கும்

                                                               சரணங்கள்

                                            ஆராயாமல் நாம் சுவாசிக்கும் போதும்

                                            ஶ்ரீராமன் நாமமே நாமுரைக்க வேண்டும்

                                            நேராக நடக்கும் தருணங்களில் கூட

                                             மனம் ராம நாமமே நினைத்திட வேண்டும்


                                            அறிந்துமறியாமலும்  செய்த பிழைக்கெல்லாம்

                                            வருந்தித் துதித்திடும் மருந்தும் ராம நாமமே

                                            பெருந்துயர் நீங்கிடச் செய்திடும் ராம நாமம்

                                            அருந்தவத்தினருமுரைத்திடும் திருநாமம்


                                            குருவென ஒருவரைத்  தேடாமலே நாம்

                                            குரு ராம நாமமே என்று துணிந்தந்தத்

                                            திருநாமம் தனையே தினமுரைத்திடுவோம்

                                            பிரமம் குருவனைத்தும் ராம நாமமே


                                            விழித்ததும் நினைப்பதும் ராம நாமமே

                                            வழி நடந்திடும் போதும் ராம நாமமே      

                                            தொழில் செய்யும் நேரமும் ராம நாமமே

                                            தொழுவதெப்போதும் ராம நாமமே


                                             பயணிக்கும் வேளையிலும் காத்திருக்கும் வேளையிலும்

                                             தயங்காது ராம நாமமே உரைப்போம்

                                             செயல் படும் போதும் ஓய்விலும் கூட

                                             அயராது ராம நாமமே நினைப்போம்


                                             ஓயாது ராம நாமமே சொல்லுவோம்       

                                             நோய் தீர்க்கும் மருந்தவன் நாமமெனக் கொள்ளுவோம்      

                                             வாயர உரைப்பவர்க்கு தாயாக வருவான்  

                                             மாயா பவப்பிணி நீங்கிடச் செய்வான்