Thursday, 30 November 2023
அஞ்சனை…..
பரம பத நாதனே…..
பரம பத நாதனே…..
பல்லவி
பரம பத நாதனே கோபாலா
பரவாசுதேவனே சென்ன கேசவா
துரிதம்
சுரபதி நரர் சுரர் சுகசனகாதியர்
அரனயனனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தும்
பரந்தாமன் நீயே ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
பரதனுக்குப் பாதுகையையளித்த ரகுராமனே
கரதூஷணாதியரை வதம் செய்த ஶ்ரீராமா
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உனையே வணங்கினேன்
பரம் பொருள் நீயே எனக்கருள்வாயே
“கொடுப்பினை”
“கொடுப்பினை”
ஒரு பிச்சைக்காரன் தெருவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டே பல வருடங்களாகப்
பிச்சை எடுத்துக்கண்டிருந்தானாம். அவன் ஒரு நாள், செத்த பிறகு, மக்களெல்லாம் சேர்ந்து அவனுடைய அந்த - ஒரே இடத்திலேயே நகராமல் நின்று பிச்சையெடுத்த சாதனைக்காக அவனுக்கு அவன் நின்ற இடத்மிலேயே ஒரு சிலை வைக்க முடிவு செய்தார்களாம் ( இந்தக் கதையின் களம் தமிழ் நாடாகத்தானிருக்கும் என்று உங்கள் உள் மனம் சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல), அதற்காக
அந்த இடத்தை தோண்டிய போது அந்த இடத்தில் ஒரு பெரிய புதையல் பொக்கிஷம் இருந்ததாம்!
இது ஒரு கதை இந்தக் கதையில் வரும் பிச்சைக்காரன் வேறு யாருமல்ல நாம் தான். நமக்குக் கீழேயே பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு நாம் வாழ்நாள் முழுவதும் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
ம் என்ன துர்பாக்கியம் அல்லது என்னே கடவுளின் செயல்!! “எங்கோ எப்பவோ படித்தது”
Wednesday, 29 November 2023
ஆனந்தம்….
படித்தேன்! ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
ஆனந்தம்….
பல்லவி
ஆனந்தம் கல்வி நல்வாழ்வளித்திடும்
ஞான சரஸ்வதியின் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
தேனார் மொழியாளலைமகள் மாகாளி
தேனுவும் கேசவனும் அரனயனும் போற்றும்
சரணம்
வானவர் தானவர் இந்திரன் மற்றும்
கானுறை முனிவரும் வியாசரும் வால்மீகியும்
பானுவும் சந்திரனும் கோள் களனைத்தும்
கரம் பணிந்தேத்தும் சகல கலாவாணியை
துள்ளி வரும்……..
துள்ளி வரும்……..
பல்லவி
துள்ளிவரும் வேலைத்துணையாகக்கொண்டேன்
எள்ளி நகையாடும் சூரனை வதைத்த
அனுபல்லவி
பள்ளி கொண்ட கேசவனின் மருகன் முருகன்
வள்ளிமணாளன் வைத்திருக்கும் ஆயுதமாம்
சரணம்
புள்ளி மயில் வாகனன் தேவசேனாபதி
உள்ளன்புடன் போற்றுமடியார்கள் நேசன்
வெள்ளமெனக் கருணை மழை பொழியுமந்தப்
பிள்ளைத்தோற்றம் கொண்ட குமரன் கரத்தினின்று
வாசுதேனுனையே துதித்தேன்…..
வாசுதேனுனையே துதித்தேன்…..
பல்லவி
வாசுதேவனுனையே துதித்தேன் ….( ஶ்ரீ )
ஆசுகவியாயெனைப் பாடச்செய்த கேசவனே
துரிதம்
பூசுரரும் வாசவாதி தேவர்களும் மற்றும்
நான்முகனும் நாரதரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
காசினியோர் போற்றும் கமலக்கண்ணனே
பாசத்தளைகளைக் களையும் பதுமநாபனே
சரணம்
நீச அரக்கரை வேரறுத்த மாதவனே
மாசறு பொன்னே தேசமுடைத் தாமோதரனே
ஈசன் நேசனே ஶ்ரீமன் நாராயணனே
வாச மலர் தூவி திருவடி பணிந்து
ஆனந்தம்….
படித்தேன்! ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
ஆனந்தம்….
பல்லவி
ஆனந்தம் கல்வி நல்வாழ்வளித்திடும்
ஞான சரஸ்வதியின் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
தேனார் மொழியாளலைமகள் மாகாளி
தேனுவும் கேசவனும் அரனயனும் போற்றும்
சரணம்
வானவர் தானவர் இந்திரன் மற்றும்
கானுறை முனிவரும் வியாசரும் வால்மீகியும்
பானுவும் சந்திரனும் கோள் களனைத்தும்
கரம் பணிந்தேத்தும் சகல கலாவாணியை
****
நலந்தரும் சிவனை……
நலந்தரும் சிவனை……
பல்லவி
நலந்தரும் சிவனை நாள் தொறும் துதித்தேன்
குலம் கல்வி நல்வாழ்வனைத்தையுமளிப்பவனை
அனுபல்லவி
உலகுண்ட வாயன் கேசவன் நேசனை
இலஞ்சியை அணிகலனாயணிந்திருப்பவனை
சரணம்
மலைமகள் பார்வதியை மடி வைத்திருப்பவனை
தலையில் கங்கையச் சுமந்திருப்பவனை
கலையணிந்தவனைச் சந்திரசேகரனை
முலை மூன்றுடையவளின் கரம் பிடித்தவனை
தலையைந்துடையவனை ஆலகாலமுண்டவனை
புலையானாவதரித்த காலகாலனை
அலங்காராமாய்ச் சுடலைப்பொடியணிந்தவனை
உலகையழிக்கும் வல்லமை கொண்டவனை
எவருடைய மடியில் மலையரசியின் மகள் பொலிவுடன் அமர்ந்திருக்கிறாளோ, எவர் ஆகாய கங்கையைத் தனது தலையில் சுமக்கிறாரோ, எவருடைய சிரசில் அந்த பிறைச்சந்திரன் ஓய்வெடுக்கிறானோ, எவருடய தொண்டை ஆலகால விஷத்தைப் நிறுத்திப் பிடித்துக் கொண்டுள்ளதோ, எவருடைய மார்பு சர்ப்பத்திற்கு இடமளிக்கிறதோ, எவருடைய உடலைச் சாம்பல் அலங்கரிக்கிறதோ, எவர் எல்லா கடவுளுக்கும் தலைவனாக விளங்குகிறரோ, எவர் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தவரோ, அப்படிப்பட்ட எங்கும் நிறைந்த சந்திரனைப் போன்ற சிவபெருமான் என்றும் நம்மைக் காக்கட்டும். (ஸ்ரீ ராம சரித மானஸ)
Monday, 27 November 2023
மண்ணையுண்ட வாயனை….
மண்ணையுண்ட வாயனை….
பல்லவி
மண்ணையுண்டவாயனை மதுசூதனனை
கண்ணனை எப்போதும் பாடு என் நாவே
அனுபல்லவி
கண்ணில் காணுமிடங்களிலெல்லாம்
கண்ணனே இருக்கின்றானென்றே நினைந்து
சரணம்
எண்ணமெல்லாமவன் நினைவே நிறைந்திருக்க
உண்ணும் போதும் உறங்கும் போதும்
வண்ணமிகு காட்சிகளைக் காணும் போதும்
கண்ணனைக் கேசவனைப் பாடென் நாவே
மண்ணில் பிறந்த பயனேயந்த
கண்ணனின் புகழ் பாட என்றே நினைந்து
பண்ணிசைத்துப் பரவசித்தவன் லீலைகளை நினைந்து
கண்ணனை மணிவண்ணனைப்பாடிடென் நாவே
மண் மீது வேலையாய் நடந்திடும் வேளையிலும்
கண்மணியுன் பிள்ளையை முத்தமிடும் நேரத்திலும்
பெண்மணியென் மனைவியுடன் பேசும் போதிலும்
கண்ணனை மறவாமல் பாடிடென் நாவே
வெண்ணிலவைப் பழிக்குமழகு முகமுடையோனை
புண்ணியம் செய்தோர்க்கு க்கண்ணெதிரில் தெரிபவனை
மண்ணுலகும் விண்ணுலகும் வியந்தேத்தும் மாதவனை
கண்ணனைப் பாடென் நாவே
Each line is having ‘kRuShNa enabArade’ which means ‘why don’t you chant Krishna?’
when you are born as human being (nara janma baMdAga)
and able to speak (nAlige iruvAga)
why don't you chant Krishna (kRuShNa enabArade)
If you chant Krishna (kRuShNA eMdare) all your agonies (kaShTavu) will be solved (parihAra)
why don't you chant Krishna (kRuShNa enabArade)
when you get up (maimuridELutalomme) from the bed after sleeping (malagiddu)
when you are walking (suLidADutalomme) within the house (maneyoLagAdaru)
While taking bath (snAna), drinking water/milk (pAna), chanting sacred words (japa tapa)
when you satisfied (tRuptanAgi) with sumptuous/feast food (shAlyAnna Shadrasa tiMdu)
While eating (meluvAga) perfumed (gaMdhava pUsi) paan beeda (tAMbUlava)
while sitting (kuLitomme) on the cushion-bed (ceMduLLa hAsigeyoLu)
when you are hugging (bigidappi) your child (kaMdanna) with affection (muddADuta)
when you are intimately conversing (sarasavADuta) with your wife (maMdagAminiyoLu)
while speaking (mAtanADuvAgalomme) too much (mEre tappi)
while walking (naDevAga) on the road (dAriya) and while carrying (horuvAga)
heavy load (bhArava)
When you are speaking (ADutalomme) of fun (parihAsyada mAtu)
With so much work schedules (pari pari kelasadoLu)
make calling Krisha also one schedule (oMdu kelasaveMdu)
when God is helping you remove (taridu bisADuvAgalomme)
all the sing/guilts (durita rAshigaLannu)
who travels (gamana) on Garuda (garuDa) our (namma)
Purandara vittala why don't you chant Krishna (kRuShNa enabArade)
உனைப் பாடி……
உனைப் பாடி……
பல்லவி
உனைப் பாடி மகிழ்ந்தேன் தாயே காமாக்ஷி
எனைத் தேடிவந்து தரிசனம் தந்த
துரிதம்
அனங்கன் நரர் சுரர் நான்முகனிந்திரன்
சனகாதி முனிவர்கள் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
முனைப்புடன் துதிப்பவர் வினைப்பயன் களைபவளே
நினைப்பவர் மனங்களில் நிலைத்திருப்பவளே
சரணம்
தினையளவுத்துதித்தாலும் பனையளவுப் பயன் தரும்
சுனை நீராய்ச்சுரக்கும் கருணைக்கடலே
தனைத் துதிக்குமடியாரின் நலம் பேணும் நாயகியே
அனைத்தும் நீயே கேசவன் சோதரியே
தரிசனம் தந்தெனை……
“இன்றொரு புதுப் பாடல்”
தரிசனம் தந்தெனை……
பல்லவி
தரிசனம் தந்தெனையாண்டருள்வாயே
அரியயனரன் பணியும் மங்களாம்பிகையே
அனுபல்லவி
புரி சங்கேந்திய கேசவன் சோதரியே
நரியைப் பரியாக்கிய சிவபெருமான் நாயகியே
சரணம்
சரி நிகர் சமானமில்லாத ஈச்வரியே
பரிவுடன் பக்தரைக் காக்கும் லலிதாம்பிகையே
கரியவளே கமல மலரேந்தும் கரத்தாளே
மரித்தலும் பிறத்தலுமில்லாத நிலை பெற
ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी ।
चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥
Sunday, 26 November 2023
பற்றினேன் மலர்ப் பதம்….
பற்றினேன் மலர்ப் பதம்….
பல்லவி
பற்றினேன் மலர்ப்பதம் ஶ்ரீலலிதாம்பிகையே
உற்ற துணை நீயே மங்களாம்பிகையே
அனுபல்லவி
புற்றிடம் கொண்ட அகச்தீசவரன் நாயகியே
கற்றறிந்தோர் போற்றும் கேசவன் சோதரியே
சரணம்
வெற்றி தரும் மலைமகளுக்கு வெற்றி
வெற்றி தரும் காமாக்ஷி தேவிக்கு வெற்றி
வெற்றியந்த மகேச்வரனுக்கு வெற்றி
வெற்றி வெண்ணிலவுப் பிறையணிந்த உமைக்கு
“ மூக பஞ்சசதி” ஆர்யா சதகம் 100
जय जय जगदम्ब शिवे
பரம்பொருளே…
பார்த்தேன்!பரவசித்தேன்! பாடல் புனைந்தேன்!
பரம்பொருளே…
பல்லவி
பரம்பொருளே சிவனே நிறமில்லாதவனே
அரனே உன் அரவிந்த பதம் பணிந்தேனே
துரிதம்
நரர் சுரர் நாரதர் சுரபதி ரதிபதி
கணபதி கணங்களிந்திரன் துதித்திடும்
அனுபல்லவி
அரவிந்த நாபன் கேசவன் நேசனே
புரமெரித்தவனே திரிபுராந்தகனே
சரணம்
சிரந்தனில் கங்கையை வைத்திருப்பவனே
பிரமன் சிரம் கொய்த பரமேச்வரனே
சரவணனைப்படைத்தவனே
சாம்பசதாசிவனே
அரவணிந்தவனே காலாந்தகனே
****
Saturday, 25 November 2023
என்ன சொல்லி உன்னை…….
என்ன சொல்லி உன்னை…….
பல்லவி
என்ன சொல்லி உன்னைப் பாட என் பிரிய கேசவனே
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
அனுபல்லவி
மின்னலைப் பழிக்கும் புன்னகை முகத்தோனே
கன்னலே இன்னமுதே பொன்னே மாமணியே
சரணம்
சின்னஞ்சிறு வடிவெடுத்து மூவுலகளந்தவனே
மின்னும் வைஜயந்தி கௌஸ்பமணிந்தவனே
வண்ணமிகு குழலேந்தும் ஶ்ரீவாசுதேவனே
பண்டரிபுரத்தரசே பாண்டுரங்க விட்டலனே
மின்னும் அணி விளக்கே நாராயணனே
தென்னிலங்கை சென்று ராவணனை வதைத்தவனே
குன்றைக் குடையாக்கி குளிர் மழை தடுத்தவனே
இன்றுமடியாரைக் காக்கும் புரந்தர விட்டலனே
காதலனும் வடிவம் கண்டேன்!
❤🙏
கட்டிக்கரும்பே..தேனே...கற்கண்டே,மாசறு பொன்னே,தெம்மாங்குத்தென்றலே,
கிட்டி வந்தவர் தமைக்குளிர்விக்கும்
கடலலையே! .கட்டுக்கடங்காத கருணைவெள்ளமே
எட்டு திக்கிலும் எழில் வீசும் வீசும் இலங்கொளியே!
பண்டரி புரத்து நல்முத்தே
நந்தாவிளக்கே!நாராயணா!வானவருக்கும் வரம் கொடுக்கும் வல்லானே! கஸ்தூரி திலகமணிந்து கெளஸ்துப மாலையாய் மிளிர்பவனே!
ரங்கா..ரங்கா! பாண்டு ரங்கா🙏🙏🙏 ...இனிய காலை வாழ்த்துக்கள்...🙏💢
அகிலாண்டேச்வரியே……
வழங்கப்படுவார்கள். வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர். இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்; எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி
முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம்
வாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராக்ஷங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர்
விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.
Friday, 24 November 2023
கணபதி ஒருவனே….
கணபதி ஒருவனே….
பல்லவி
கணபதி ஒருவனே முழுமுற்கடவுள்
வணங்கிடுவோம் அவனிரு கமலபதம்தனை
அனுபல்லவி
தணலேந்தும் நெற்றிக் கண்ணன் மகன்
குணம் பல கொண்ட கேசவன் மருகன்
சரணம்
அணங்குகள் சித்தியும் புத்தியும் அருகிருக்கும்
கணநாதன் வேழமுகன் மோதகக்கையன்
உணவருந்தி குபேரன் கர்வம் தீர்த்தவன்
இணையடி பணிவோர்க்கருள் தருமிறைவன்
பிணங்கிய வள்ளியை சிங்கரவேலன்
மண முடிக்க உதவிய அழகிய ஆனைமுகன்
கணங்களும் நந்தியும் நான்முகனுமிந்திரனும்
வணங்கிடும் சுமுகன் மறைபோற்றும் கரிமுகன்
இருவினைப் பயன்களைய…..
இருவினைப் பயன்களைய…..
பல்லவி
இருவினைப்பயன்களைய வரவேண்டுமெனவே
இருகரம் கூப்பி கேசவனை வேண்டினேன்
அனுபல்லவி
தருமம் தழைக்க பல அவதாரமெடுத்தவனை
திருவின் நாயகனை ஶ்ரீமன் நாராயணனை
சரணம்
திருத்தோள் நான்கும் சிவந்த வாயும்
கரு நிறமும் கமலக் கண்களும் கையில்
திருச்சக்கரமும் வெண்சங்குமேந்தும்
பெருத்த உருவமும் கொண்ட திருமார்பனென்
புறமறக் கட்டிக்கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறைமுறை யாக்கை புகல்ஒழியக் கண்டுகொண் டொழிந்தேன்
நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய் செய்ய தாமரைக்கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே
பொ-ரை :- புறத்திலே ஒன்றும் தோன்றாதவாறு நலமுறக் கட்டிக் கொண்டு வருத்துகின்ற கொடிய இரண்டு வினைகளாலே சரீரத்தில் முறை முறையாகப் புகுதல் தவிரும்படியாக, நிறத்தையுடைய விசாலமான நான்கு திருத்தோள்களையும் சிவந்த திருவாயினையும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையும் அறத்தையே செய்கின்ற சக்கரத்தைத் தரித்த அழகிய திருக்கையையும் கரிய மேனியையுமுடைய சுவாமியைக் கண்டுகொண்டேன் என்கிறார்.
என்ன பாட்டுப்பாட…..
என்ன பாட்டுப்பாட…..
பல்லவி
என்ன பாட்டுப் பாட தாயே மங்களாம்பிகையே
உன்னைப் போற்றியே இன்னும் நான்
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே மாயே
பன்னகாபரணன் மனங்கவர் நாயகியே
சரணம்
அன்னநடை சின்ன இடை மின்னலைப் பழிக்கும்
புன்னகைப் பூமுகம் உன்னத உருவம்
தன்னிகரில்லா தனிப்பெருந்தெய்வம்
என்றெல்லாம் வர்ணனைகள் பலப்பல செய்தோ
முன்னும் பின்னும் பலர் சொன்ன சொல் கோர்த்து
சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை ஆவேனோ
பொன்னே கன்னலே இன்னமுதே பூவே
என்னும் பொருளிலா வார்த்தைகளை சேர்த்தோ
Thursday, 23 November 2023
படத்திலிருக்கும் ஶ்ரீலலிதாம்பிகையே….
படத்திலிருக்கும் ஶ்ரீலலிதாம்பிகையே….
பல்லவி
படத்திலிருக்கும் ஶ்ரீ லலிதாம்பிகையே
அட, என் மனத்தில் நீ எழுந்தருள்வாயே
அனுபல்லவி
கடல் வண்ணன் கேசவன் அன்பு சோதரியே
விடமுண்ட கண்டன் நேசிக்குமீச்வரியே
சரணம்
கடல் மகளும்,கலைமகளும்,மலைமகளும் நீயே
பட அரவுக் குடை கீழே அமர்ந்திருப்பவளே
புடமிட்ட பொன்னே மா மணியே
புகழ் மிகு மீயச்சூர் தலத்துறைபவளே
குருவாயுரப்பா …..
குருவாயுரப்பா …..
பல்லவி
குருவாயுரப்பா நவநீத கண்ணா
இருள் நீங்கி என் மனம் ஒளியுறச்செய்வாய்
அனுபல்லவி
வருமிடர் தீர்க்கும் கேசவனே மாதவனே
தருமம் தழைக்கச்செய்யும் கலியுகவரதனே
சரணம்
இருவினைப் பயன் நீங்கச் செய்திடுவாயென
திருவடியைச் சரணடைந்தேன் கருணைக்கடலே
பெருமைக்குரிய குருவாயூர் தலத்துறையும்
அருள் தரும் தெய்வமே ஶ்ரீமன் நாராயணா
Tuesday, 21 November 2023
உனை வணங்க….
உனை வணங்க….
பல்லவி
உனை வணங்க ஓராயிரம் பெயர் தந்த உத்தமனே
எனதுடல் பொருளாவியனைத்துமுனதே
அனுபல்லவி
மனத்துள் உனையன்றி வேறில்லை கேசவனே
எனக்கருளும் பரந்தாமனென்றும் நீயே துணை
சரணம்
நாமமாயிரத்தின் பொருளாய் விளங்கும்
நாராயணனே நான்மறை போற்றும்
சீராளனுனையே கரம் கூப்பி சிரம் தாழ்த்தி
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினேன்
तमेव चार्चयन्नित्यं भक्त्या पुरुषमव्ययम् ।
ध्यायन् स्तुवन् नमस्यंश्च यजमानस्तमेव च ॥
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 11
தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச:
ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன். ஓம் நமோ நாராயணா !
கந்தனை சிவன் மகனை…,,,
கந்தனை சிவன் மகனை…,,,
பல்லவி
கந்தனை சிவன் மகனை வந்தனை புரிந்தேன்
தேவசேனாபதியை கிரௌஞ்சனையழித்தவனை
அனுபல்லவி
இந்திரன் மகளை மணந்த குமரனை
ஆறுமுகனைப் பார்வதி மைந்தனை
சரணம்
தாரகாசுரனை வதைத்த கார்த்திகேயனை
ஆராவமுதன் கேசவன் மருகனை
கூரான சக்தி வேலேந்தும் முருகனை
பாரோர் பணிந்தேத்தும் பாலனை குகனை
விச்வேச்ரன் சிவனின் பிரிய குமாரனை
நெற்றிக்கண்ணனின் அக்கினியிலுதித்தவனை
வேண்டுவோர் வேண்டும் வரங்களைத்தருபவனை
தண்டாயுதபாணியாய்ப் பழனியிலுறைபவனை
உலகைப் படைத்தவனை வள்ளிமணாளனை
நலமருளும் முனிவர்கள் துதித்திடும் குருபரனை
கலகங்கள் செய்த அரக்கரை அழித்தவனை
அலகிலா விளையாடல் பல புரிந்த குகனை
விசாக நட்சத்திரத்துதித்த விசாகனை
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனை
கொடிய அரக்கன் சூரனை வதைத்தவனை
அடியார்கள் வினை தீர்க்கும் வேலாயுதனை
ॐ श्रीगणेशाय नमः ।
षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्चशैलविमर्दनम् ।
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ १॥
I salute Skanda, the son of Lord Shiva,
Who has six heads and is the son of Parvathi,
Who broke into pieces the Krouncha mountain,
And who is the God who was the commander of Deva's armies?
तारकासुरहन्तारं मयूरासनसंस्थितम् ।
शक्तिपाणिं च देवेशं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ २॥
I salute Skanda, the son of Lord Shiva,
Who killed the asura called Tharaka,
Who travels on his steed, the peacock,
And who is God armed with Shakthi?
विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम् ।
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ३
I salute Skanda, the son of Lord Shiva,
Who is the God who is the darling of Shiva,
Who rose from the body of Lord Shiva,
Who is a lover, giver of boons, and stealer of mind?
कुमारं मुनिशार्दूलमानसानन्दगोचरम् ।
वल्लीकान्तं जगद्योनिं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ४॥
I salute Skanda, the son of Lord Shiva,
Who is a lad visible to great sages?As sacred joy in their mind,
Who is the consort of Valli and the progenitor of the world?
प्रलयस्थितिकर्तारं आदिकर्तारमीश्वरम् ।
भक्तप्रियं मदोन्मत्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ५॥
I salute Skanda, the son of Lord Shiva,
Who causes the final deluge,
Who is the God who recreates the world,
Who likes his devotees and is greatly exuberant.
विशाखं सर्वभूतानां स्वामिनं कृत्तिकासुतम् ।
सदाबलं जटाधारं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ६
I salute Skanda, the son of Lord Shiva,
Who was born in Visaka and is the lord,
Of all beings, is the son of Kruthika stars,
Who is a forever child and has a tuft.
स्कन्दषट्कं स्तोत्रमिदं यः पठेत् शृणुयान्नरः ।
वाञ्छितान् लभते सद्यश्चान्ते स्कन्दपुरं व्रजेत् ॥ ७॥
He who reads or hears,
This sextet on lord Skanda,
Would definitely realize all his wishes,
And in the end, go to the land of Skanda.
इति श्रीस्कन्दषट्कं सम्पूर्णम्
🍒ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ஜ ஸைல விமர்தநம்
தேவஸேநா பதீம் தேவம்
ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் 1.
( ஆறுமுகனும்
பார்வதி தேவியின் புதல்வனும்
மலை வடிவம் எடுத்த க்ரௌஞ்ச அசுரனை வதைத்தவனும்
தேவசேனையின் நாயகனும்
தெய்வமும் சிவபெருமானின் ஆத்மாவில் நிலைத்திருப்பவனும் ஆன கந்தப்பெருமானின் திருவடிகளில் எனது தலை தாழ்த்தி வணங்கி திருப்பாதங்களில் சரணடைகிறேன் )
🍒தாராகாஸுர ஹந்தாராம்
மயூராஸந ஸம்ஸ்திதாம்
ஸக்திபாணீம் ச தேவேஸம்
ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் 2.
( தாரகாசுரனை வதம் செய்தவனும்
மயில் மீது அமர்ந்து இருப்பவனும்
ஞானவேலை திருக்கரத்தில் தரித்திருப்பவனும் தேவர்களுக்கு ஈஸ்வரனும் சிவபெருமானின் ஆத்மாவில் நிலைத்திருப்பவனும் ஆன கந்தப்பெருமானின் திருவடிகளில் எனது தலை தாழ்த்தி வணங்கி திருப்பாதங்களில் சரணடைகிறேன் )
🍒விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம்
விஸ்வேஸ்வர தநூத்பவம்
காமுகம் காமதம் காந்தம்
ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் 3.
( அனைத்து உலகங்களுக்கும் ஈசன் ஆன ஸ்ரீ பரமேஸ்வரனின் வாஞ்சைக்கு உரியவனும் தெய்வமும்
லோகநாயகனின் புதல்வனும்
வள்ளி தேவசேனா இவர்களிடத்தில் காமம் கொண்டவனும்
பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும்
மனதை கவர்ந்தவனும் சிவபெருமானின் ஆத்மாவில் நிலைத்திருப்பவனும் ஆன கந்தப்பெருமானின் திருவடிகளில் எனது தலை தாழ்த்தி வணங்கி திருப்பாதங்களில் சரணடைகிறேன் )
🍒குமாரம் முநிஸார்த்தூல
மாநஸாநந்த கோஸரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநீம்
ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் 4.
( குமரக்கடவுளும் சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்தமய கோச வடிவமாக தோன்றுகிறவனும்
வள்ளி மணவாளனும் உலகங்கள் தோன்ற காரணமானவனும் சிவபெருமானின் ஆத்மாவில் நிலைத்திருப்பவனும் ஆன கந்தப்பெருமானின் திருவடிகளில் எனது தலை தாழ்த்தி வணங்கி திருப்பாதங்களில் சரணடைகிறேன் )
🍒 ஸ்திதி கர்தாரம்
ஆதிகர்தார மீஸ்வரம்
பக்தப்ரியம் மதோந்மத்தம்
ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் 5.
( ப்ரளயம் ரக்ஷணம் இவைகளை செய்கிறவனும்
முதலில் உலகை படைத்தவனும்
அனைவருக்கும் தலைவனும்
பக்தர்களிடம் அன்பு கொண்டவனும்
ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபெருமானின் ஆத்மாவில் நிலைத்திருப்பவனும் ஆன கந்தப்பெருமானின் திருவடிகளில் எனது தலை தாழ்த்தி வணங்கி திருப்பாதங்களில் சரணடைகிறேன் )
🍒விஸாகம் ஸர்வபூதாநாம்
ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபாலம் ஜடாதரம்
ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் 6.
( விசாக நட்சத்திரத்தில் உதித்தவனும்
உலகில் உள்ள அனைவருக்கும் தெய்வமும்
கார்த்திகை பெண்களின் புதல்வனும்
எப்போதும் குழந்தை வடிவமாக விளங்குபவனும்
சடைமுடி தரித்தவனும்
சிவபெருமானின் ஆத்மாவில் நிலைத்திருப்பவனும் ஆன கந்தப்பெருமானின் திருவடிகளில் எனது தலை தாழ்த்தி வணங்கி திருப்பாதங்களில் சரணடைகிறேன் )
🍒ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம்
ய: படேத் ஸ்ருணுயாந் நர:
வாஞ்ஜிதாந் லபதேஸ்ய
ஸ்சாந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத் 7.
( ஆறு சுலோகங்கள் அடங்கி உள்ள இந்த கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள் அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள்
முடிவில் ஸ்ரீ கந்தபெருமானின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள் )
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
Monday, 20 November 2023
வழித்துணை நீயே….
பார்த்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
வழித்துணை நீயே….
பல்லவி
வழித்துணை நீயே வாசுதேவனே
அழிவிலாதவனே கேசவனே மாதவனே
அனுபல்லவி
மொழியேதன்ற றியேன் உன்னுடன் பேச
செழித்த மார்பில் திருவேந்தும் அனந்தனே
சரணம்
பழி பாவத்திற்கஞ்சா பரமபதநாதனே
இழி செயல்கள் புரியாமலெனைத் தடுக்குமச்சுதனே
எழில் மிகுந்தவனே ஏழைப்பங்காளனே
விழியருள் தந்தெனையே ஆண்டருள் நாராயணனே
Sunday, 19 November 2023
கண்ணனே நான் …….
கண்ணனே நான் …….
பல்லவி
கண்ணனே நான் வணங்கும் கடவுள்
எண்ணமெல்லாமவனே நிறைந்திருக்கின்றான்
அனுபல்லவி
தண்மதி முகத்தோன் தாமரை நாபன்
பெண்ணணங்கு ராதையின் மனங்கவர்ந்த கேசவன்
சரணம்
வண்ணமிகு வடிவழகன் யசோதை பாலன்
மண்ணையுண்டவாயன் மதுசூதனன் மாதவன்
கண்ணசைவில் கோபியரை மயக்கும் மாமாயன்
திண்ணமுற அரக்கரை வதைத்த தாமோதரன்
கண்ணா…..
பார்த்தேன்! ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!
கண்ணா…..
பல்லவி
கண்ணா உன் மடி மீது கிடந்திட வேண்டும்
புண்ணியனே என் மனம் நலம் பெற வேண்டும்
அனுபல்லவி
வண்ண மயில் பீலிதனை அணிந்த கேசவனே
எண்ணமெலாம் நீயே என்னுயிர் மாதவனே
சரணம்
மண்ணையுண்ட வாயனே மதுசூதனே
தண்மதி முகத்தோனே தாமரை நாபனே
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்தும் மாயனே
பண்ணிசைத்துன் புகழ் பாடிப் பரவசத்துடனே
அடைக்கலமடைந்து….
கார்த்திகை மாதம் பிறந்தாலே காலாஷ்டமி நினைவு தான் வரும்.எங்க ஆட்கொண்டார் காலாஷ்டமி அபிஷேகம், சுவாமி புறப்பாடு மிகவும் பிரசித்தி. பயத்தில் பெரிய பயம் மரணபயம். அந்த மரணபயத்தையே பயந்தோடச் செய்யும் ஷேத்ர பாலக கால சம்ஹார மூர்த்தி.
விடையேறிய வள்ளலே
வடை சாற்றியே வந்தானே
விடை காணா வாழ்வதில்
அடைக்கலமென பணிந்தவரின்
உடைய வினை தனை
உடைத்திட்டே க்ஷேத்ர பாலகனாய்
மடை திறந்த வெள்ளெமெனருள் புரிந்து
தடை தனை தகர்த்திட்டே
சடை முடி தாங்கிய ஐயாறனே
அடை காத்தே காத்திடுவானே ஆட்கொண்ட ஈஸ்வரனாய்
Kamakshi Muthukrishnan
அடைக்கலமடைந்து….
பல்லவி
அடைக்கலமடைந்து உனை பணிந்தேன் சிவனே
படைக்கலனாய் சூலமேந்தும் காலாந்தகனே
அனுபல்லவி
சடைமுடியில் மங்கை கங்கையையேந்துமரனே
விடை வாகனனே பஞ்சநதீசனே
சரணம்
நடைவந்துனைப் பணிந்தேன் நமச்சிவாயனே
மடைதிறந்த வெள்ளமெனக் கருணை மழை பொழிந்து
உடைய வினை தீர்க்க உனதருளை வேண்டினேன்
தடையனைத்தும் தகர்த்து எனக்கருள வேண்டுமென
மீண்டும் மீண்டுமுனை…….
மீண்டும் மீண்டுமுனை…….
பல்லவி
மீண்டும் மீண்டுமுனை பாடும் வரமருள்வாய்
ஆண்டவனே அகச்தீச்வரனே
அனுபல்லவி
வேண்டும் வரங்கள் தரும் கேசவன் நேசனே
தீண்டுமரவணிந்த சிவபெருமானே
சரணம்
தாண்டவம் புரிந்திடும் சிதம்பர நாதனே
காண்டீபன் பார்த்தனுக்கு கணை தந்த சிவனே
வேண்டுதல் வேண்டாமையிலாத ஈசனே
யாண்டுமிடும்பையிலா வாழ்வெனக்களிப்பாயே
Saturday, 18 November 2023
பட அரவணிந்த……
இடர் களையும் பதிகம்
முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் அருளியது
பாடல் எண் : 03
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என் அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.
பட அரவணிந்த……
பல்லவி
பட அரவணிந்த பரமசிவனே
விடமுண்ட கண்டனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
பட அரவின் மேல் துயிலும் கேசவன் நேசனே
சுடலைப்பொடி பூசிய நெடுங்களம் சிவனே
சரணம்
திடம் கொண்டுனைப் பணிந்த பாலன்
கடன் செய்துன்னடி தொழுது நிற்கும் பாலன்
இடர் களைய காலனைக் காலாலிடறிய
அடலேறே பூவொடு நீர் சுமந்துனைத் துதித்தேன்
பத்மாவதியை…..
பத்மாவதியை…..
பல்லவி
பத்மாவதியை கோவிந்தன் நாயகியை
திருச்சானூர் திருத்தலத்தில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
பத்மநாபன் கேசவன் மார்பிலுறைபவளை
சத்தியவதியை திருமகளை அலைமகளை
சரணம்
வித்தர் ஞானியர் வேதங்கள் வியந்தேத்தும்
உத்தமியைத் திருமகளை உன்னதமானவளை
மத்தகஜங்கள் நீராட்டும் வேழத்திருமகளை
புத்தம் புதுக் கமல மலர் கையிலேந்தும்
கத்தும் கடல் நடுவே உறங்கும் நாராயணன்
சத்தியகிரிநாதன் திருவேங்கடவன்
நித்திலத் தொத்தெனும் பெயருடைய ஶ்ரீநிவாசன்
பத்தினியை பரந்தாமன் மனங்கவர்ந்தவளை