கரம் குவித்து சிரம் தாழ்த்தி…..
பல்லவி
கரம் குவித்து சிரம் தாழ்த்தி பரமேச்வரியை
அறம் வளர்த்த நாயகியை பதம் பணிந்து துதித்தேன்
அனுபல்லவி
வரம் தரும் கரமும் அபயகரமும் நீட்டும்
தர்மாம்பிகையை கேசவன் சோதரியை
சரணம்
அரனெனும் ஐயாறப்பன் மனங்கவர் நாயகியை
புரமெரித்த திரிபுர சுந்தரியை சங்கரியை
இரவு பகலளிக்கும் சூரியசந்திரர் பணிபவளை
அரவுடனுறவாடும் அகிலாண்டேச்வரியை
துரிதம்
நரர் சுரர் சுரபதி ஶ்ரீபதி பசுபதி ரதிபதி
சரச்வதியின் பதி கணபதி
தேவசேனாபதி தனங்களின் அதிபதி
அனைவரும் வணங்கிடும் லலிதாம்பிகையை
No comments:
Post a Comment