தாயே கௌரி……
பல்லவி
தாயே கௌரி தயாபரி பணிந்தேன்
நீயே எனக்கருள்வாய் ஏகாம்ப்ரேச்வரி
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் சோதரி
தீயேந்தும் நெற்றிக் கண்ணன் நாயகி
சரணம்
ஆயிரம் நாமம் கொண்ட திரிபுரசுந்தரி
சேயெனவே நினைந்து ஓயாதுனைத் துதித்தேன்
தாயினும் மேலான தயவளிப்பவளே
தூயவளே காமாக்ஷி துயர் துடைக்கும் தேவி
No comments:
Post a Comment