கண்ணனே…..
பல்லவி
கண்ணனே உந்தன் கழலடி பணிந்தேனே
எண்ணமெல்லாம் நீயே எனையாட்கொள்வாயே
அனுபல்லவி
மண்ணையுண்ட வாயனே மாதவனே கேசவனே
பண்ணிசைத்துனைப் பாடிப் பரவசமடைந்தேன்
சரணம்
கண்டு கொள்ளாதவர்க்கேன் கண்ணீர் விட வேண்டும்
செவி சாய்க்காதோர்க்கு என்ன சொல்லி என்ன பயன்
அழவைத்த மனிதரிடம் ஆறுதல் தேடுவதேன்
உதறித் தள்ளியவர் மேல் உயிர் வைத்துப் பயனில்லை
No comments:
Post a Comment