தாள் பணிந்தேன்…..
பல்லவி
தாள் பணிந்தேன் தாயே மீனாக்ஷி
ஆள்வதுன் தர்ம மென்றறிந்தே நானும்
அனுபல்லவி
மாள்வதும் மீள்வதுமுனதருளாலே
தோள்வலி மிகுந்த கேசவன் சோதரி
சரணம்
வேள்விகள் புரிந்திடும் முனிவருமமரரும்
கோள்களுமமரேந்திரனும் வணங்கிடும்
வாள் விழியாளே வான் புகழ் கொண்டவளே
நாள் தொறும் துதித்திடும் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment