தேவி கௌதுகாவின்…..
பல்லவி
தேவி கௌதுகாவின் மலர்ப் பதம் பணிந்தேன்
பூவிதழ்கள் தூவி மனமாரத்துதித்து
அனுபல்லவி
ஆவினங்கள் மேய்க்கும் கேசவன் சோதரி
மாவிடை வாகனன் சிவபெருமான் நாயகி
சரணம்
காவியங்கள் போற்றும் திரிபுரசுந்தரி
கூவியழைத்து கும்பிடுமடியார்க்கு
மூவாசைப் பிணி போக்கும் சமயபுரம் மாரி
தேவரும் மூவரும் யாவரும் வணங்கிடும்
No comments:
Post a Comment