என்னேரமுமுந்தன்…..
பல்லவி
என்னேரமும் ராம நாமமே துதித்திடும்
நன் மனமெனக்கருள்வாய் ஶ்ரீ ராமா
அனுபல்லவி
பொன்னம்பலவாணன் சிவனும் போற்றிச்
சொன்ன அந்த ராம எனும் நாமமே கேசவா
சரணம்
சொன்ன சொல் காக்கும் இன்சொல் ராமனே
அன்னை கோசலையும் மன்னன் தசரதனும்
தன் மடிவைத்துக் கொஞ்சிய ரகுகுலதிலகனே
கன்னலே இன்னமுதே அடியாரைக் காப்பவனே
நன்னெறி காக்கும் அனுமனடியொத்து
இன்னுமந்த முதியவள் சபரியையும் மற்றும்
மன்னுபுகழ் மாமுனி வால்மீகி போலவும்
உன் நாமம் நீங்கதென் மனத்திலிருத்திக் கொண்டு
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
No comments:
Post a Comment