துவாரகையில்……
பல்லவி
துவாரகையில் வீற்றிருக்கும் துவாரகாதீசனை
நாவாரப் பாடி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஏவாமலே எனக்கு அருளளிப்பவனை
மூவாசைப் பிணி போக்கும் முகுந்தனை ஶ்ரீதரனை
சரணம்
கூவியழைத்த கரிக்கும் காரிகைக்கும்
தாவி வந்தபயம் தந்த கல்யாண நாராயணனை
பாவாணரனைவரும் பாட்டிசைத்துப்போற்றும்
தேவாதி தேவனை கேசவனை மாதவனை
No comments:
Post a Comment