செஞ்சு லெட்சுமியின்…….
பல்லவி
செஞ்சு லெட்சுமியின் கமல மலர்க் கழலடியை
தஞ்சமடைந்தேன் சஞ்சலம் களைந்தேன்
அனுபல்லவி
பஞ்சஞ்சு மெல்லடியாள் தாமரை மலர்க் கரத்தாள்
வஞ்சி போல் இடையாள் கடலரசன் மகளந்த
சரணம்
பிஞ்சு பாலகன் பிரகலாதனுக்கருளிய
அஞ்சா நெஞ்சன் கேசவன் நாராயணனை
வெஞ்சினம் கொண்டு அரக்கன் இரணியனின்
நெஞ்சினைப் பிளந்த நரசிம்மனை மணந்த
No comments:
Post a Comment