அவனே இவனே…….
பல்லவி
அவனே இவனே என்றுனைப் பாடித்திரியும்
இவனைக் காத்தருள்வாயே சாம்ப சதாசிவனே
அனுபல்லவி
புவனம் பதினான்கையும் ஆண்டருளுமீசனே
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசனே
சரணம்
தவனம் மரிக்கொழுந்து கொன்றையணிந்தவனே
உவகையுடனுமைக்கு ஒரு பாதியளித்தவனே
குவலயம் கொண்டாடும் ஓங்காரப் பொருளே
பவ பயம் நீக்கிடும் பரமேச்வரனே
சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ சாம்ப சிவா
No comments:
Post a Comment