கனகசபேசா…….
பல்லவி
கனக சபேசா கைலாசவாசா
உனையே துதித்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
உனதருளாலன்றோ உலகமியங்குவது
வனமாலையணிந்த கேசவன் நேசனே
சரணம்
அனங்கனையெரித்த அரனே சிவனே
சனக சனந்தனர் பணிந்திடுமீசனே
கனக சைலமுறை காமாக்ஷி நாயகனே
உனதருள் இல்லையேல் உலகமுய்யுமோ
No comments:
Post a Comment