கண்ணன் நீயேயெனை…..
பல்லவி
கண்ணன் நீயேயெனைக் கைவிட்டால்
மன்னனே இனி நான் வேறெங்கு செல்வேன்
அனுபல்லவி
அண்ணலே உனையன்றி துணை வேறு எனக்கில்லை
வெண்ணையுண்ட வாயனே கேசவனே மாதவனே
சரணம்
கண்களுனைக் காணாவிடில் புண்களே என்று
எண்ணிடும் ஏழையேனை உதாசீனம் செய்வதேன்
பண்ணிசைத்துன் லீலைகளை பாடுவதேயன்றி
மண்ணில் நானேதும் செய்ததில்லை மாயனே
துரிதம்
கண்ணா மணிவண்ணா முரளீதரா கோவிந்தா
எண்ணங்களிலுனையே தினமெண்ணித் துதிக்கின்றேன்
No comments:
Post a Comment