கரிசனத்துடனே…..
பல்லவி
கரிசனத்துடனே தரிசனம் தந்த
திரிபுரையை சமயபுரம் மாரியைத்துதித்தேன்
அனுபல்லவி
பரிவுடன் பக்தரைக் காக்கும் அன்னையை
திரிவிக்கிரமன் கேசவன் கேசவன் சோதரியை
சரணம்
எரியும் தீச்சட்டி ஏந்தியே வழிபடும்
நெறிகொண்ட அடியாரின் குறைகளைக் களைந்திடும்
திரிசூலி ஓங்காரி விரிசடையோன் நாயகி
பரிபுரமணிந்த சீறடியாளை
No comments:
Post a Comment