உனையன்றி யாருளார்…..
பல்லவி
உனையன்றி யாருளார் ஓ ரகுராமா
எனைக்காக்க இவ்வுலகில் தினகரகுலத்தோனே
அனுபல்லவி
கனகாங்கி ஜானகியின் கரம் பிடித்த கேசவனே
வனமாலை கௌஸ்த்துபமணிந்த மாதவனே
சரணம்
உனது கதையான ராமாயணமோ
இன்னும் பிற சாத்திர புராணங்களோ
எதுவும் நான் படித்ததில்லை கதைகளும் கேட்டதில்லை
இனகுலதிலகனே மனம் திருந்தி உனைத்துதித்தேன்
சினந்து நீ வெறுத்தாலும் பரிந்தெனை அணைத்தாலும்
இனி உனைத் துதிப்பதன்றி வேறு கதி எனக்கில்லை
அனுமனைப் போலவே எப்போதுமுனைத் துதிக்கும்
மனமெனக்கருளவும் நற்கதி தரவும்
துரிதம்
ஜானகி ராமா, பட்டாபி ராமா,கோதண்ட ராமா,தசரத ராமா,
சீதாராமா, ஶ்ரீஜெய ராமா, அயோத்தி ராமா, ஆனந்த ராமா
No comments:
Post a Comment