Saturday, 25 March 2023

கடல் நடுவே…..

 


இடது கையில் அழகான சக்கரம் ஏந்தியவரே! கஜேந்திரன் என்னும் யானையைக் காத்தவரே! 

முதலையின் சாபத்தைப் போக்கியவரே! கருணை நிறைந்த கண்களைக் கொண்டவரே! அழகு மிகுந்தவரே! 

பிரத்யும்னன் என்னும் மன்மதனைப் பிள்ளையாகப் பெற்றவரே! பட்டு, பீதாம்பரம் அணிந்தவரே! 

பக்தரைக் காப்பவரே! அர்ஜுனனின் தேரோட்டியாக வந்தவரே! உம்மை வணங்குகிறேன்.


                                  கடல் நடுவே…..


                                        பல்லவி

                   கடல் நடுவே கிடந்துறங்கும் ஶ்ரீமன் நாராயணனை

                   அடலேறென விளங்கும் கேசவனைப் பணிந்தேன்

                                      அனுபல்லவி

                   படமெடுத்த பாம்பணைமேல் பள்ளிகொண்ட திருமாலை

                   குடமாடும் கூத்தனை கோவிந்த ராஜனை

                                          சரணம்

                   இடக்கையில் அழகிய சக்கரமேந்தியவனை

                   முதலை சாபம் நீக்கி யானையைக்காத்தவனை

                   மதலையென மன்மதனையீன்ற அழகனை

                   பார்த்தனுக்கு சாரதியாய் வந்த மாதவனை                                 

வாமே கரே சாரு சக்ரம் வார 

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்ஸப்த நக்ரம்! 

காருண்யஸம் பூர்ண நேத்ரம் ஸ்வீய 

ஸௌந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்! 

ஸ்ரீபார்த்த ஸாரத்ய வேஷம் பீத 

வஸ்த்ராதிபூஷம் பஜே பக்த போஜம்! 

ஶ்ரீபார்த்தசாரதிபெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏

No comments:

Post a Comment