கந்தனே…..
பல்லவி
கந்தனே சுந்தரேசன் மகனே எனக்கருள்
விந்தையாய் பல லீலைகள் புரிந்த குமரனே
அனுபல்லவி
செந்தாமரைக்கண்ணன் கேசவன் மருகனே
இந்திரன் மகள் தெய்வானையை மணந்தவனே
சரணம்
சுட்ட பழம் வேணுமோ சுடாத பழம் வேணுமோ வென
திட்டமுடன் ஔவையை கேட்ட கதிர்வேலனே
மட்டவிழ் மலர் தூவி மலர்ப் பதம் பணிந்தேன்
கெட்டதொன்றுமணுகாமல் வினை நீங்கச் செய்வாயே
No comments:
Post a Comment