உற்றதுணை நீயே…..
பல்லவி
உற்ற துணை நீயே ஶ்ரீ ரகு ராமா
மற்றனைத்தும் பயனில்லை மரகதவண்ணனே
அனுபல்லவி
பொற்றாமரைக் கரத்தாள் ஜானகி மணாளனே
வற்றாத கருணைக் கடலே கேசவனே
சரணம்
நற்றவ முனிவரும் ஞானியரும் யோகியரும்
பற்றற்றவரும் மற்றோரும் போற்றும்
குற்ற மற்ற குணவானே கோதண்ட ராமனே
பற்றினேனுன் பதம் பரிந்தெனக்கருள்வாய்
No comments:
Post a Comment