கலாரசிகனே……
பல்லவி
கலாரசிகனே கண்ணனே கேசவனே
நிலாத்துண்ட திங்கள் துண்டத்தாயுனைப் பணிந்தேன்
அனுபல்லவி
அலாதியானவனே அனந்தசயனனே
நிலாவின் கலையணிந்த உமையாள் சோதரனே
சரணம்
பலா பலன்களை நிர்ணயிக்கும் பரமனே
சிலாதோரணமமைத்தத் திருமாலே
துலாபாரம் பெற்று குறைகள் தீர்ப்பவனே
தலங்களுள் சிறந்த காஞ்சியிலுறைபவனே
No comments:
Post a Comment