Monday, 20 March 2023

திருமால் கேசவன்………

கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு,

ஸ்ரீ நாமகிரி தாயார் - கணிதமேதையான   ராமானுஜத்திற்கு,

தானே அனுக்ரஹம் செய்து அருளியதாம் இந்த ஸ்லோக பாராயணம் மிகவும் பலனுள்ளதாக இருக்குமென்று நம்பப்படுகிறது.. 

பனிரெண்டு தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல்,

அவர்களுக்குக் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதையும் ஆகலாம் என்பது பக்தர்களின் ஆழ்ந்த விஸ்வாஸமாக இருக்கிறது..

Salutations  to the  goddess  who  is blessed  as one who proclaims  the gem like  Sri Vidhya Manthra,

Who fulfils the desire of power, Who is considered as all the Gods,

Who is praised  by all devas, who  is the queen of all  empires,

Who is Lakshmi , Who has within her all Vedas, who is learned and intelligent ,

Who wishes for the good  of the universe, Who  is the pure one who wishes for welfare  of  the world; Who is on the chest of Lord Vishnu

ஸ்லோகம்:-

*ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா  

ப்ரகடித விபவா*  

*ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா*  

*ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி*  

*லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா  

விஸ்வ கல்யாணபூமா*  

*விஸ்வ க்ஷேமாத்ம யோகா  

விமல குணவதி  

விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா*


श्रीविद्या मन्त्र रत्न प्रकटित विभवा श्री सुबलापूर्ण कामा

सर्वेश प्रार्थित सकल सुरनुत सर्व साम्राज्यधात्री

लक्ष्मी श्री वेदगर्भ विदुरतु मतिसा विश्व कल्याणभूमा

विश्व क्षेमतां योगा विमला गुणवती विष्णु  वक्षस्थलस्य


திருமால்  கேசவன்……… 


பல்லவி

                             திருமால் கேசவன் திருமார்பிலுறைபவளை

                             திருவென்னும் பெயராளை திருமகளைத் துதித்தேன்

                                                     அனுபல்லவி

                             இருவினைப் பயனகல கல்வி செல்வம் நலம் பெற

                              குருவருள் திருவருள் அனைத்துமடைந்திடவும்

                                                          சரணம்

                             இரத்தினமாய் விளங்கும் ஶ்ரீவித்யா உட்பொருளை

                             நரர் சுரர் சகலரும் பணிந்தேத்தும் தேவியை

                             மறை பொருளை உலக நலன் நாடும் நாயகியை

                            குறையொன்றுமில்லாத குணவதியை ஶ்ரீயை

                             

                              

No comments:

Post a Comment