பவனி வரும்…….
பல்லவி
பவனி வரும் சிவனைக் கண்டு மகிழ்ந்தேன்
அவனருள் வேண்டி அவன் தாள் பணிந்தேன்
துரிதம்
சிவகணம் நந்தி நான்முகனிந்திரன்
தவமுனி நாரதரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
அவனியோர் கொண்டாடும் கேசவன் நேசன்
சிவகாமி சங்கரி மனங்கரீசன்
சரணம்
தவளம் மரிக்கொழுந்து கொன்றை மலர் மற்றும்
பவளமல்லியரளி புனைந்த மலர் மாலைசூடி
நவரத்தினம் முத்து மாணிக்கம் வைரம்
சுவர்ணத்தில் பதித்த ஆரங்களணிந்து………( பவனி…)
உவகையுடன் மேள தாளங்களுமிசைக்க
சிவனடியார்களும் மறையோது வேதியரும்
யுவதிகளும் பாட்டிசைத்து அழகுடனுடன் வர
புவனம் போற்றும் அகிலாண்டேச்வரனை……( பவனி….)
சிவ சிவ சிவ என அடியார்கள் முழங்கிட
தவ நெறியாளர்கள் கை தொழுது பின் தொடர
பவ பயம் போக்கிடும் கபாலீச்வரனை
குவலயம் கொண்டாடும் சர்வேச்வரனை…..( பவனி…..)
No comments:
Post a Comment