கிழிந்த காகிதம்போல்…..
பல்லவி
கிழிந்த காகிதம்போல் கிடந்திடுமெனது இந்த
இழிந்த நிலை கண்டு இரங்காததேன் ராமா
அனுபல்லவி
விழி வைத்துனைப் பார்த்து தினம் துதி்த்தலல்லாது
பழி பாவமேதும் நான் மனமறிந்து செய்ததில்லை
சரணம்
மொழி மதமினமென வித்தியாசம் கண்டதில்லை
இழி செயல் குழி பறித்தல் துரோகம் புரிந்ததில்லை
வழி தவறி நடந்ததில்லை எவரையும் வஞ்சிக்கவில்லை
எழிலனுனைத் தொழுவதன்றி வேறேதும் செய்ததில்லை
No comments:
Post a Comment