அன்னப்பிரியையே…..
பல்லவி
அன்னப்பிரியையே ஶ்ரீ லலிதாம்பிகையே
அன்னபூரணியே உன்னைத் துதித்தேன்
துரிதம்
கன்னியரெழுவர் நரர் சுரரிந்திரன்
சனகாதி முனிவர்கள் பிரமன் வணங்கிடும்
அனுபல்லவி
மின்னல் கொடியிடையாளே கேசவன் சோதரியே
பன்னகாபரணன் சிவபெருமான் மனங்கவர்
சரணம்
மின்னலோரயிரம் ஒளிக்கு நிகரானவளே
முன்னும் பின்னுமாய் மறைபொருளிலிருப்பவளே
உன்னைச் சரணடைந்தோரைக் காக்கும் கற்பகத்தருவே
கன்னலே தேனே கடம்பவன வாசினியே
No comments:
Post a Comment