வீடுகளில் காப்புக்கட்டப்படுகிறது. பெண்கள் வீதிகளை அடைத்துக் கோலமிடுகிறார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் திருவிழாவினைக் காண ஊர் விட்டு ஊர் செல்கிறார்கள். பூச்சொரிதல் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். நிறைய மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வணங்குவர்.
விரதமிருந்து வழிபடுதல், சக்திக்கரகம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. கோவில்களில் தேரோட்டம், பூம்பல்லாக்கு, தெப்பம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தண்ணீர்ப்பந்தல்கள் மற்றும் அன்னதானம் எல்லாம் உண்டு.
சமயபுரம் மாரியை…..
பல்லவி
சமயபுரம் மாரியை பூச்சொரிதல் காண்பவளை
உமயாளைக் கேசவன் சோதரியைத் துதித்தேன்
துரிதம்
நாயகி, நான்முகி, நாராணி, சாயகி,
வாயகி, மாலினி, வாராகி, சூலினி,
சாம்பவி, சங்கரி, சாமளை,ஆயகி,
மாலினி,சூலினி, வாராகி என்னும்
அனுபல்லவி
இமவான் மகளவளே கயிலைநாதன் நாயகி
குமரன் கணபதியை ப்படைத்த மகேச்வரி
சரணம்
வீதியெங்கும் கோலங்கள் விழாக்கோலாகலங்கள்
பாதி மதியணிந்த சுந்தரியின் பூம்பல்லாக்கு
முளைப்பாரி,பால் குடம், தீச்சட்டி ஊர்வலம்
தீ மிதி,அலகு குத்தல், தெப்பம், தேரோட்டம்
சக்திக் கரகமுடன் நேர்த்திக் கடன் வழிபாடு
தண்ணீர் பந்தல்கள், அன்னதான ஏற்பாடு
அத்தனை கொண்டாட்டங்களும் சிறப்புடன் நடைபெற
பச்சைப் பட்டினியேற்று விரதங்கள் காணும்
No comments:
Post a Comment