சதமல்ல…..
பல்லவி
சதமல்ல இவ்வுலக வாழ்வென்றறிந்தே உன்
பதம் பணிந்தேன் ஶ்ரீ ராமா எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
விதம் விதமாய்த் தோன்றும் பந்தங்களும் சதமல்ல
சதம் நீயொருவனே முதம் தரும் கேசவனே
சரணம்
மத போதகர்கள் சொல்லும் வழிகளும் முறைகளும்
இதம் தரும் பொருள் போகமெதுவும் சதமல்ல
முதம் தரும் உனதினிய பதமொன்றே சதமென
அறிந்துனையே நானும் அனுதினம் துதித்தேன்
No comments:
Post a Comment