Wednesday, 22 March 2023

திருமகளைத் திருமார்பில்…..

 

திருமாலின் முக்கியமான பன்னிரு நாமங்களில் ஒன்பதாவது பெயர் ஸ்ரீதரன். குருக்ஷேத்திரப்போர் முடிந்தபின், பீஷ்மர்,மன்னனான தர்மருக்கு, பல நீதிகளையும் சொல்லி, முடிவில் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற அரிய தோத்திரத்தையும் சொல்லி வைக்கிறார். அதில் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் பட்டியலிடப்படுகின்றன. 

ஸ்ரீதரன் என்றபெயர் 610-வது பெயராக வருகிறது. ‘லட்சுமி’ தேவியைத் தாங்குபவர் என்பது பொருள். எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பவள் மகாலட்சுமி. ‘மணிக்கு ஒலி போலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்திற்குச்சுவை போலவும், இயற்கையாகவுள்ள தொடர்பினால் எப்போதும் லட்சுமியைச் சேர்ந்திருப்பவர்’ என்று இராமனுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வாரின் மகனான, பராசர பட்டர் உரை எழுதுகிறார்.


                           திருமகளைத் திருமார்பில்…..


                                            பல்லவி

                     திருமகளைத் திருமார்பில் தாங்கும் ஶ்ரீதரனின்

                     திருமாலின் கேசவனின் திருவடியைப் பணிந்தேன்

                                          அனுபல்லவி

                     பெருமைக்குரிய நாராயணனுமவனே

                     அருமாகடலமுதன் அனந்தபத்மனாபன்

                                             சரணம்

                    மணிக்கு ஒலியெனவும் மலருக்கு மணமெனவும்

                    மதிக்கு நிலவெனவும் அமுதத்தின் சுவையெனவும்

                    கதியவன் பதமெனத் துதிக்குமடியார்க்கு

                    நிதியென அவனருளை அள்ளி அளித்திடும்             

                    

No comments:

Post a Comment