குருவாயுரப்பனெனும்…..
பல்லவி
குருவாயுரப்பனெனும் திருமாலைத் துதித்தேன்
பெருமானே முகுந்தா எனக்கருள வேண்டுமென
துரிதம்
பாவலர் பண்டிதர் நாரதர் நான்முகன்
தேவர்களிந்திரன் யாவரும் வணங்கும்
அனுபல்லவி
அருமாகடலமுதனவன் ஆதிகேசவன்
பெருமைக்குரிய ஶ்ரீமன் நாராயணனவனே
சரணம்
வருமிடர் தீர்த்தெனை வாஞ்சையுடன் காக்கும்
அனந்தபத்மனாபனும் அச்சுதனுமவனே
திருமலையில் வீற்றிருக்கும் கோவிந்தனுமவனே
இருவினைப் பயன் நீக்கும் வாசுதேவனவனே
No comments:
Post a Comment