கற்பகமே மயிலை……
பல்லவி
கற்பகமே மயிலை அற்புதமே
பொற்பதம் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
துரிதம்
விற்பன்னர் வேதியர் ஞானியர் முனிவர்கள்
சிற்பரன் பிரமன் திருமால் வணங்கிடும்
அனுபல்லவி
தற்பரன் கபாலியின் மனம் கவர்ந்தவளே
பற்பலரும் போற்றும் கேசவன் சோதரியே
சரணம்
சொற்களுக்கடங்காத பேரழகுடையவளே
துர்க்குணம் கொண்ட அரக்கரையழித்தவளே
சற்குணம் நிர்குணம் நிறைந்த பரம்பொருளே
நற்கதி பெறவே நாளுமுனைத் துதித்தேன்
No comments:
Post a Comment