கண்ணனே நான்……
பல்லவி
கண்ணனே நான் வணங்கும் கடவுள் — உடுப்பி
துரிதம்
விண்ணவர் மண்ணவர் நாரதர் நான்முகன்
தண்மதி கதிரவன் நான்மறை வணங்கிடும்
அனுல்லவி
வண்ணமிகு அலங்காரம் புனைந்திடும் கேசவன்
வெண்ணையுண்ட வாயன் கருமுகில் வண்ணன்
சரணம்
எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் மதுசூதனனவன்
வெண்ணிலவை மன்மதனைப் பழிக்கும் பேரழகன்
மண்ணையுண்ட தன் வாயில் உலகேழும் காட்டியவன்
புண்ணியம் செய்தோர்க்குக்கண்ணெதிரில் காட்சிதரும்
No comments:
Post a Comment