விட்டலனே……
பல்லவி
விட்டலனே என் சென்ன கேசவன் — பாண்டுரங்க
அனுபல்லவி
பட்டாடையணிந்து பார்ப்பவர் மனம் மயங்க
சுட்ட செங்கல் மீது நின்று காட்சி தரும்
சரணம்
கட்டழகு மேனியுடன் கைகளை இடுப்பில் வைத்து
வட்டநிலா முகம் மலர பூவிதழில் புன்னகை மலர
அட்டிகை மணிமாலை மலர் மாலை சூடிய
எட்டெழுத்தான் ஶ்ரீமன் நாராயணனென்னும்
No comments:
Post a Comment