ஓங்கார வடிவமே…..
பல்லவி
ஓங்கார வடிவமே உன்னுருவம்
சிங்காரவேலனே மங்காத பொன்னே
அனுபல்லவி
தீங்கின்றி உலகாளும் கேசவன் மருகா
பாங்குடனே காட்சி தரும் வயலூர் முருகா
சரணம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவனே
சங்கரி சங்கரன் மடிவைத்துக் கொஞ்சிடும்
செங்கோடனே குமரா வள்ளி மணாளனே
பங்கய பதம் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment