பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்
ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு
காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே (5.
கரம்பனூர் உத்தமனே…….
பல்லவி
கரம்பனூர் உத்தமனே கருணாமூர்த்தியே
பரம் பொருளே உந்தன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
பிரமன் சிரம் கொய்த பாவம் தீர்க்கவே
பரமசிவன் பணிந்த திருமாலே கேசவனே
சரணம்
திருக்குறுங்குடி வளர் எம்பெருமானே
திருத்தண்காலுறை தண்காலப்பனே
திருப்பேர் நகருறை அப்பக்குடத்தானே
திருவரங்கத்துறையும் உலகுண்டவாயனே
No comments:
Post a Comment