துணையிருப்பாள்……
பல்லவி
துணையிருப்பாள் மாகாளி அன்னை பைரவி
இணையடி பணிந்திடும் பக்தருக்கெல்லாம்
அனுபல்லவி
இணையென தனக்கொருவரில்லாத ஈச்வரி
கணை ஐந்து வைத்திருக்கும் கேசவன் சோதரி
சரணம்
தணலேந்தும் நெற்றிக் கண்ணன் நாயகி
அணங்குகள் திருமகளும் கலைமகளுமன்புடன்
வணங்கிடுமன்னை திரிபுரையுமவளே
அணைத்தருளளித்திடும் தாயும் அவளே
No comments:
Post a Comment