பரப்பிரம்மமும்……
பல்லவி
பரப்பிரம்மமும் பரிபூரணனுமவனே
நரவடிவாயவதரித்த ஶ்ரீராமனுமவனே
அனுபல்லவி
அரனயன் கொண்டாடும் கேசவனுமவனே
மரவுரி தரித்து கானகம் சென்ற ராகவனுமவனே
சரணம்
இரவுபகலுருவாக்கும் சூரிய குலதிலகனவன்
புரந்தரனும் நரர் சுரரும் வணங்கிடும் பரந்தாமனவன்
கரதூஷணாதியரின் கதை முடித்த மாலனவன்
அரக்கன் ராவணனையழித்த ரகுராமனவன்
துரிதம்
தாரக ராமன் ஶ்ரீஜெயராமன் கோதண்ட ராமன் பட்டாபிராமன்
மாரனைப் படைத்த அனந்தராமன் மாருதி துதிக்கும் ஜானகிராமன்
No comments:
Post a Comment