பட்டாபி ராமனை……
பல்லவி
பட்டாபி ராமனை தசரத குமாரனை
எட்டெழுத்தானை உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பட்டாடையணிந்தவனை வட்டநிலா முகத்தானை
சுட்ட செங்கல் மீது நிற்கும் பாண்டுரங்க விட்டலனை
சரணம்
அட்டாலும் சுவை குன்றா பாலைப்போலிருப்பவனை
சுட்டாலும் வெண்மை தரும் சங்கினையொத்தவனை
கெட்டலையுமென் மனத்தை சீர் திருத்த வேண்டி
மட்டவிழ் மலர் தூவிப் பாதம் பணிந்து
No comments:
Post a Comment