பொன்வண்ண மாதே…….
பல்லவி
பொன்வண்ண மாதே மஹாலக்ஷ்மி
மென் மலர்த்தாள் பணிந்தேன் எனக்கருள்வாய்
துரிதம்
மன்மதனிந்திரன் சுகசனகாதியர்
தும்புரு நாரதரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
சென்ன கேசவன் நாயகி
கன்ம வினை தொலைய உனையே துதித்தேன்
சரணம்
அமரர் துதித்திடும் கமலமலர்க் கரத்தாளே
கமலநாபன் மணிமார்பிலுறைபவளே
அமரேந்திரனும் பிரமனும் வணங்கிடும்
சுமங்கலியே மங்களம் நிறைந்தவளே
கமல மலரமர் கலைவாணியும் நீயே
உமா மகேச்வரியும் நீயே தாயே
அமுதைப் பொழியும் மதி முகத்தாளே
சமுத்திர ராஜன் மகளே கல்யாணி
No comments:
Post a Comment