வரதராஜனை……
பல்லவி
வரதராஜனைப் பிரார்த்தனை புரிவாய்
அரனயனமரர் வணங்கிடும் கேசவனை
துரிதம்
நரர் சுரர் நாரதர் சுகசனகாதியர்
கரம் பணிந்தேத்தும் புரந்தரவிட்டலன்
அனுபல்லவி
பரந்தாமனவனே பரம்பொருளுமவனே
நிரந்தரம் நமைக்காக்கும் தேவாதி தேவன்
சரணம்
கரமுரனரக்கரையழித்த நாராயணன்
வரம் தரும் கரமும் அபயகரமும் நீட்டும்
பரவாசுதேவன் பேரருளாளன்
ஆராவமுதன் அத்திகிரி நாதன்
No comments:
Post a Comment