அவதாரமெடுத்து……..
பல்லவி
அவதாரமெடுத்து அவனியைக் காத்தவனே
சிவதனுசை முறித்தவனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவனும் நீயே
சிவபிரான் போற்றிய திருநாமமுடையவனே
சரணம்
தவயோகியர் முனிவர் ஞானியர் மற்றும்
குவலயத்தோரனைவரும் கொண்டாடும்
சிவராமனே அன்னை சீதையின் நாயகனே
பவக் கடலைக் கடக்க நீயேயெந்தன் துணை
No comments:
Post a Comment