கண்ணனாய் வந்தாலென்ன…….
பல்லவி
கண்ணனாய் வந்தாலென் ராமனாய் வந்தாலென்ன
அண்ணலே கேசவா எனையாண்டுகொள்ளமல் நீ
அனுபல்லவி
வெண்ணையுண்டவாயனே வேணுகானலோலனே
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் வருபவனே
சரணம்
பண்ணிசைத்துப் பாடியுனை அனுதினம் துதித்தேன்
மண்ணிலுள்ள கோவிலெல்லாம் தினம் தினம் வலம் வந்தேன்
தண்டனிட்டுன்னடியார்கள் தாளினைப் பணிந்தேன்
புண்ணியனே இனி செய்வதறியாது நிற்கின்றேன்!!
No comments:
Post a Comment