महाकाली ध्यानम्
ॐ खड्गं चक्रगदेषुचापपरिघान् शूलं भुशुण्डीं शिरः
शङ्खं सन्दधतीं करैस्त्रिनयनां सर्वाङ्गभूषावृताम् ।
यां हन्तुं मधुकैटभौ जलजभूस्तुष्टाव सुप्ते हरौ
नीलाश्मद्युतिमास्यपाददशकां सेवे महाकालिकाम् ॥
மாகாளி…..
பல்லவி
மாகாளி பைரவியை வணங்கித் துதித்தேன்
முக்கண்ணுடையவளைக் கேசவன் சோதரியை
அனுபல்லவி
போகசயனம் கொண்ட திருமாலுக்குதவி
மதுகைடபாதியரை வதம் செய்ய அருளிய
சரணம்
ஐந்திரண்டு கரங்களில் சூலம் கதையம்பு
கத்தி புசுண்டி கொம்பு கேடயம் வில்
அறுந்த அசுரன் தலை சங்கு சக்கரமேந்தி
ஈரைந்து முகமும் கை காலுமுடைவளை
கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர: சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம் யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம். இது
தேவி மஹாத்மியம் மகாகாளி த்யானம்.
தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.
No comments:
Post a Comment