தென்றலைப் போலெனக்கு….
பல்லவி
தென்றலைப் போலெனக்கருளிய கணபதியை
அன்றாடம் துதித்து பாடி மகிழ்ந்தேன்
அனுபல்லவி
என்றுமெனைக்காக்கும் கேசவன் மருகனை
அன்று திரிபுரனை கொன்றழித்த சிவன் மகனை
சரணம்
குன்று தோராடும் குமரனின் சோதரனை
வென்றரக்கன் கஜமுகனின் கதைமுடித்த கரிமுகனை
நன்றவன் தாள் பணிந்து தொடங்கும் கருமங்கள்
என்றும் நல்லவண்ணம் நிறைவுற அருளளிப்பவனை
No comments:
Post a Comment