பரம புருஷனை……
பல்லவி
பரம புருஷனைப் பரந்தாமனை
கரம் குவித்து சிரம் பணிந்து மனமாரத்துதித்தேன்
துரிதம்
அரனயனிந்திரன் அனுமன் கருடன்
நரர் சுரர் நாரதரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
அரவணைதனில் துயிலும் திருமாலைக் கேசவனை
முரளீதரனை முகுந்தனை மாதவனை
சரணம்
அரவிந்த நாபனை அரவிந்த நயனனை
கரன் முரனை வதைத்தவனை பரவாசுதேவனை
சரணடைந்தோர் நலம் காக்கும் திருமகள் மார்பனை
கரங்களில் சங்கும் சக்கரமும் வைத்திருக்கும்
No comments:
Post a Comment