கோடிவினை தீர்க்கும்….
பல்லவி
கோடிவினை தீர்க்கும் கோதண்ட ராமனே உனை
பாடித்துதித்தேன் வலியிடர் நீங்கிடவே
அனுபல்லவி
நாடித்துதித்திடுமடியார்க்கெல்லாம்
ஓடி வந்து உதவிடும் கேசவனே மாதவனே
சரணம்
தேடித்தேடி உனை வணங்கிடுமென்னை
வேடிக்கையாக நீ பார்த்திருப்பதேனோ
ஈடிணையில்லா பரம் பொருள் நீயே
ஆடிக்களைத்தேன் இனி ஆடமுடியாது
No comments:
Post a Comment