தேசுடைய…….
பல்லவி
தேசுடைய ஈசனைக் காசிநாதனை
ஆசுகவிபாடி மனமாரத்துதித்தேன்
துரிதம்
பூசுரர் வானவர் நந்தி கணங்கள்
மாசறு முனிவர்கள் பிரமன் வணங்கிடும்
அனுபல்லவி
மாசிலாமணியைக் கேசவன் நேசனை
பாசத்தளைகளை களைந்திடும் சிவனை
சரணம்
நீச அரக்கன் திரிபுரனை வதம் செய்த
தேசுடைய முக்கண்ணன் சாம்பசதாசிவனை
விசாலாக்ஷியின் மனங்கவர் நாயனை
வாச மலர் தூவி கமலபதம் பணிந்து
No comments:
Post a Comment